வந்தவாசி:வந்தவாசி அருகே, பெண் குளிப்பதை எட்டி பார்த்த வாலிபரை, 'போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பிருதுாரை சேர்ந்தவர் ஷேக், 34; இவர், அப்பகுதியிலுள்ள ஒரு வீட்டிற்கு சென்று, அந்த வீட்டுப்பெண் குளிப்பதை எட்டிப்பார்த்தார். அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிட்டதால், அவர் அங்கிருந்து தப்பியோடினார். வந்தவாசி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து ஷேக்கை, போக்சோவில் கைது செய்தனர்.