மகளிர் குழுவினருக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு இலக்கு எட்ட முடியாமல் அலுவலர்கள் தவிப்பு
Added : செப் 29, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் வழங்க ரூ.750 கோடி அரசு ஒதுக்கியிருக்கிறது. ஆனால், பழைய கடன் இன்னும் நிலுவையில் இருப்பதால், இலக்கை எட்ட முடியாமல், மகளிர் திட்ட அலுவலர்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் செயல்படும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மானிய கடன், சுழல் நிதி, தொழில் துவங்க கடன் என, பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி வழங்கப்படுகிறது.



இதில், வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள நகர்ப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக, தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் உருவாக்கப்படுகிறது.கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தில், 6,717 மகளிர் குழுக்கள் இருக்கின்றன. நடப்பு நிதியாண்டில், மாநகராட்சியில் 420, நகராட்சிகளில், 250, பேரூராட்சிகளில் 330 என, 1,000 குழுக்கள் உருவாக்க இலக்கு நிர்ணயித்ததில், 525 உருவாக்கப்பட்டிருக்கின்றன. மகளிர் குழுவினருக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்க, நடப்பு நிதியாண்டில், 750 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களாகியும், இதுவரை, ரூ.221.12 கோடியே விடுவிக்கப்பட்டு இருக்கிறது.இது, 29 சதவீதம் மட்டுமே. நிதியாண்டு முடிவதற்குள் ஒதுக்கிய நிதியை முழுமையாக வழங்கி, இலக்கை எட்ட முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதால், மகளிர் திட்ட அலுவலர்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.இதுதொடர்பாக விசாரித்தபோது, அவர்கள் கூறியதாவது:கூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுவினர், பல்வேறு கடன் வாங்கியிருக்கின்றனர். நகை கடன், மகளிர் குழு கடன், கொரோனா கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் நிலுவையில் இருக்கின்றன.ஏதேனும் ஒரு கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்; மற்ற கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும் என, அரசு அறிவுறுத்தியிருக்கிறது.நகை கடன் தள்ளுபடி பெற்றவர்கள், மகளிர் குழுவில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பெற்ற கடனுக்கான தவணையை, திருப்பிச் செலுத்த முடியாததால், வட்டி அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.சில உறுப்பினர்களுக்கு கொரோனா கடன் மட்டும் இருக்கிறது. வட்டியுடன் கடன் தொகை முழுமையாக செலுத்த முன்வந்தாலும், அதை பெற கூட்டுறவு வங்கிகள் முன்வராததால், மகளிர் குழுவினர் அதிருப்தியில் இருக்கின்றனர்.சிக்கலான சூழல் தொடர்வதால், இரு ஆண்டுகளாக மற்ற கடன் வழங்க முடியாத சூழல் இருக்கிறது. இதுதொடர்பாக, உயரதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றோம். ஒரு வாரத்துக்குள் தீர்வு காண்பதாக உறுதியளித்திருக்கின்றனர்.இவ்வாறு, மகளிர் திட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.மகளிர் குழுவினருக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்க, நடப்பு நிதியாண்டில், 750 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களாகியும், இதுவரை, ரூ.221.12 கோடியே விடுவிக்கப்பட்டு இருக்கிறது.

இது, 29 சதவீதம் மட்டுமே. நிதியாண்டு முடிவதற்குள் ஒதுக்கிய நிதியை முழுமையாக வழங்கி, இலக்கை எட்ட முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதால், மகளிர் திட்ட அலுவலர்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X