தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில், நிறைந்துள்ள புதர்களை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரசு மருத்துவமனையில், நோய் குணமடைய வேண்டி வரும் நோயாளிகளை, விஷப்பூச்சிகள் தீண்டும் ஆபத்தான நிலை உள்ளது.எனவே, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் இணைந்து மருத்துவமனை வளாகத்திற்குள் உள்ள புதர்களை அகற்றி சுத்தம் செய்து, நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்கின்றனர் நோயாளிகள்.