பருவமழைக்கு சென்னை தப்புமா? ஒரு நாள் மழைக்கே திணறியது மாநகரம்
Updated : செப் 29, 2022 | Added : செப் 29, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சென்னையில் நேற்று பெய்த ஒரு நாள் மழைக்கே, பிரதான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி தேங்கியது. போக்குவரத்து பாதிப்பால் மாநகரம் திணறியது. ஒரு நாள் மழைக்கே இந்த கதி என்றால், விரைவில் துவங்க உள்ள வடகிழக்கு பருவ மழைக்கு தப்புமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.latest tamil newsசென்னையின் பல்வேறு பகுதிகளில், நேற்று பிற்பகல் மிதமானது முதல் கன மழை வரை பெய்தது. இதில், கோடம்பாக்கம் மண்டலம் அசோக் நகர் ஐந்தாவது அவென்யூ, 26வது தெருவில் சாலை முழுதும் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளிலும் வெள்ளம் புகுந்தது.

இப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக, ஒவ்வொரு மழைக்காலத்திலும் வெள்ளம் தேங்கி வருவதாக மக்கள் வேதனைதெரிவித்தனர்.மழை காரணமாக, நேற்று மாலை அசோக் நகர் - வடபழநி 100 அடி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Latest Tamil News
Next News

அதேபோல், அடையாறு மண்டலம் வேளச்சேரி, தரமணி, கிண்டி பகுதிகளிலும், சோழிங்கநல்லுார் மண்டலம் துரைப்பாக்கம், காரப்பாக்கம், செம்மஞ்சேரி பகுதிகளிலும் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது. தேனாம்பேட்டை மண்டலம் திருவல்லிக்கேணி, மந்தைவெளி பகுதிகள் பாதிக்கப்பட்டன.

திருவொற்றியூரில், ஜோதி நகர், ராமநாதபுரம், சரஸ்வதி நகர், எர்ணாவூர் ஆதி திராவிட காலனி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. மேலும் திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதி, அண்ணா நகர் மண்டலம் சிட்கோ நகர் பகுதிகள் பாதிக்கப்பட்டன.ராயபுரம் மண்டலத்தில், பிராட்வே, பிரகாசம் சாலை, கொடுங்கையூர் உள்ளிட்ட பல பகுதிகள் பாதிக்கப்பட்டன.வண்ணாரப்பேட்டை, வால்டாக்ஸ் சாலை பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.


75 சதவீதம் நிறைவு
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில், 'சிங்கார சென்னை - 2.0 திட்டம்' பகுதி - 1 மற்றும் 2ன் கீழ், வெள்ள பாதிப்புகளை தடுக்க 277.04 கோடி ரூபாய் மதிப்பில் 60.83 கி.மீ., நீளத்திற்கு பணிகள் நடந்து வருகின்றன.
அதேபோல், வெள்ள நிவாரண நிதியின் கீழ் 295.73 கோடி ரூபாயில், 107.57 கி.மீ., நீளத்துக்கும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் 27.21 கோடி ரூபாயில், 10 கி.மீ., நீளத்திற்கும் பணிகள் நடந்து வருகின்றன.

மூலதன நிதியின் கீழ் 8.26 கோடி ரூபாயில் 1.05 கி.மீ., நீளத்திற்கும், உலக வங்கி நிதி உதவியின் கீழ் விடுப்பட்ட இடங்களில் 120 கோடி ரூபாய் செலவில் 44.88 கி.மீ., புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதில் சிங்கார சென்னை - 2.0 திட்டத்தின் கீழ், 94 சதவீத பணிகள் முடிந்துள்ளன.
அதேபோல், இதர திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் அடிப்படையில், ஒட்டுமொத்தமாக 75 சதவீதம் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளன.

இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட மழைநீர் வடிகால் மற்றும் கடந்தாண்டுகளில் தண்ணீர் தேங்கிய இடங்களில் நேரில் ஆய்வு செய்யும்படி, அனைத்து பொறியாளர்களுக்கும் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டார்.
மேலும் 'புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கால்வாய்களில் வெள்ளம் எப்படி செல்கிறது' என, அதி:காரிகளுடன் வேளச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், மாநகராட்சி கமிஷனரும் ஆய்வு செய்தார்.


சென்னையில் நேற்று பல இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக, எம்.ஆர்.சி., நகரில் ஒரு மணி நேரத்தில் 4.2 செ.மீ., மழை பெய்தது. அங்கு, புதிதாக மழை நீர் வடிகால் கட்டப்பட்டு சீரமைக்கப்பட்டது. அந்த வடிகாலில் 20 நிமிடத்திற்குள் மழைநீர் வெளியேறியது. அதேபோல், அனைத்து இடங்களிலும் மழை பெய்து முடிந்த 10 முதல் 20 நிமிடங்களில் நீர் வடிந்துள்ளது. இந்த மழை நீர், புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வடிகால்களில் சரியாக செல்கிறதா, ஏதேனும் குறைபாடு உள்ளதா என, கமிஷனர் அறிவுறுத்தல்படி, அனைத்து பொறியாளர்களும் ஆய்வு செய்துள்ளனர். இது குறித்து, வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து, கமிஷனருக்கு 'வாட்ஸ் ஆப்'ல் அனுப்பப்பட்டுள்ளது.
-சென்னை மாநகராட்சி அதிகாரிகள்ஆலோசனை கூட்டம்
சென்னையில் வெள்ள பாதிப்பு தடுப்பு பணிகளுக்கு, மண்டல வாரியாக 15 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தமிழக அரசு நியமித்தது. அதேநேரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை போன்ற பெரிய மண்டலங்கள் இருப்பதால், அதற்காக கூடுதலாக இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் என, 17 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் ரிப்பன் மாளிகையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள பரிந்துரைகள்:
= சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணிகள் 94 சதவீதம் முடிந்துள்ளது. வரும் அக்., 10ம் தேதிக்குள் 100 சதவீதம் பணிகளை முடிக்க அறிவுறுத்த வேண்டும்
= மழை நீர் வடிகால், மின்சாரம் கேபிள் புதைத்தல், குடி நீர் குழாய் புதைத்தல் ஆகிய பணிகளால் சேதமடைந்த சாலைகளில் உள்ள பள்ளங்களில் ஜல்லி கற்கள் கொண்டு பலப்படுத்தி, கான்கிரீட் அல்லது தார்சாலை போட நடவடிக்கை எடுக்க வேண்டும்
= கொசஸ்தலை, கோவளம் ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அப்பணிகள் நடைபெற்ற இடங்களில் மழைநீர் செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதா ஆய்வு செய்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்
= தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களில் கடந்தாண்டுகளில் மழைநீர் தேங்கிய இடங்களில் ஆய்வு செய்து அங்கு தேவையான மின் மோட்டார்கள் தயார் நிலையில் இருக்கிறதா, என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்த வேண்டும்
= சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம், மின்சார வாரியம், பொதுப்பணித்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


விமான சேவை பாதிப்பு
திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்ததால், சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க வந்த விமானங்கள் இறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. ஹாங்காங்கில் இருந்து 2:15 மணிக்கு சென்னையில் தரை இறங்க வேண்டிய விமானம், மதுரையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானம், டாகாவில் இருந்து வந்த இண்டிகோ விமானம், 1:30 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தன.
இதே போல அந்தமான், மதுரை, டில்லி, புனே, கோல்கட்டாவில் இருந்த வர வேண்டிய விமானங்கள் தாமதமாக தரையிறங்கின.பெங்களூரில் இருந்து 4:20 மணிக்கு சென்னை வர வேண்டிய ஆகாசா விமானம், பெங்களூருக்கே திருப்பிவிடப்பட்டது.கோலாலம்பூர், விசாகப்பட்டினம், கவுகாத்தி, கோல்கட்டா, கொழும்பு விமானங்களும் தாமதமாக புறப்பட்டனகுளமாகும் பஸ் நிலையங்கள்
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ், 31 பேருந்து நிலையங்கள் உள்ளன. இதில், பல பேருந்து நிலையங்கள், 50 ஆண்டுகளாக இயங்கி வருகின்றன.இந்த பேருந்து நிலையங்களில் காலகட்டத்திற்கு ஏற்ப பல மாற்றங்கள் செய்யப்பட்டாலும், அவற்றில் பல நிலையங்களின் நிலை படுமோசமாக உள்ளன.

இதில், தி.நகர், வடபழநி, கே.கே.நகர், திருவொற்றியூர், பிராட்வே, திருவான்மியூர், உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் மழைக் காலங்களில் குளமாக மாறுவது வாடிக்கை. இதனால், பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், வணிக வளாகங்களுடன் பணிமனைகளை நவீனமயமாக்கி வருவாய் ஈட்டும் திட்டத்தின் கீழ், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள 16 பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

இது குறித்து மாநில உள்கட்டமைப்பு வளர்ச்சிக் குழு நிதி உதவியுடன் விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக, கடந்த மே மாதம் சட்டசபையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்திருந்தார்.ஆனால், அடுத்த மழைக்காலம் நெருங்கிய நிலையில், தேர்வு செய்யப்பட்ட பேருந்து நிலையங்களில் இன்னும் முதற்கட்ட பணிகள் கூட துவங்கப்படவில்லை. இதனால், இந்த ஆண்டும் மழையின் போது, பேருந்து நிலையங்கள் குளமாக மாறுவதிலும், பயணியர் அவதிப்படுவதிலும் எந்த மாற்றவும் நிகழப் போவதில்லை என்பது உறுதி.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
29-செப்-202220:58:45 IST Report Abuse
Ramesh Sargam வரப்போகும் பருவமழைக்கு சென்னை தப்புமா? தப்பவே தப்பாது. பாதிப்பு ஏற்பட்டபின், ஆளும் கட்சி, முன்பு ஆண்ட கட்சியின் மீது குற்றம் சுமத்தி அசிங்க அரசியல் அதாவது ஆங்கிலத்தில் dirty politics செய்வார்கள்.
Rate this:
Cancel
Raj Sudarsanam - North Carolina,யூ.எஸ்.ஏ
29-செப்-202219:03:35 IST Report Abuse
Raj Sudarsanam ஜாதி மத வேறுபாடின்றி உடனடி தேவை மக்கள் தொகை கட்டுப்பாடு...
Rate this:
Cancel
Ramamurthy N - Chennai,இந்தியா
29-செப்-202212:21:38 IST Report Abuse
Ramamurthy N குறைந்த நேரத்தில் அதிகன மழை பெய்தால் தண்ணீர் தேங்க தான் செய்யும். 15 நாட்களுக்கு முன் பெங்களூரில் கனமழை பெய்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி போட் விடவேண்டிய நிலைமை வந்தது. இப்போது தான் அரசு மழைநீர் தேங்காதபடி இருக்க மாநகராட்சி மூலம் திறமையான அதிகாரிகளை நியமித்து நடவடிக்கை எடுக்கிறது. சிலருக்கு ஒரு அரசை பிடிக்கவில்லை என்பதற்காக ஒட்டு மொத்த அதிகாரிகளையும் குறை சொல்வது அழகல்ல. நமது தினமலர் நிருபர் கூட மழை பெய்து சிலமணி நேரத்தில் தண்ணீர் ஓடிவிடுவதாக தெரிவித்துள்ளார்
Rate this:
Girija - Chennai,இந்தியா
29-செப்-202213:07:14 IST Report Abuse
Girijaஅதானே ஒங்கள போல் ஒரு நாலு பேர், வேண்டாம் வேண்டாம் நீர் ஒருவரே போதும் நாடு விளங்கிடும். பெங்களூரில் வாரக்கணக்கில் பெய்த மழை அளவு வேறு இங்கு நேற்று சென்னையில் பெய்த சாதாரண மழை அளவு வேறு. இதே 2017 இல் பெய்த மழைக்கு குய்யோ முறையோ என்று அலப்பறை செய்தது என்ன? இப்போது செய்வது என்ன? மொட்டை தாத்தா குட்டையில் விழுந்தான் என்பது போல் உள்ளது உங்கள் கருத்து....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X