வள்ளலார் அருள் மாளிகையில் 5ம் தேதி ஐம்பெரும் விழா | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
வள்ளலார் அருள் மாளிகையில் 5ம் தேதி ஐம்பெரும் விழா
Added : செப் 29, 2022 | |
Advertisement
 விழுப்புரம் : வள்ளலாரின் 200வது பிறந்த நாளை முன்னிட்டு, விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகை சார்பில் ஐம்பெரும் விழா, வரும் 5ம் தேதி நடக்கிறது.விழாவையொட்டி, 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு வள்ளலார் பற்றிய பேச்சு போட்டி, அருட்பெருஞ்ஜோதி அகவல் ஒப்புவித்தல் போட்டி, வரும் 2ம் தேதி நடக்கிறது.பேச்சு போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ. 10 ஆயிரம், 2வது பரிசு 5,000, மூன்றாம் பரிசு 3,000 ரூபாய் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க 30ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.அகவல் ஒப்புவித்தல் போட்டி 2ம் தேதி மதியம் 2:00 மணிக்கு நடக்கிறது. முதல் பரிசாக 5,000 ரூபாய், இரண்டாம் பரிசாக ரூ. 3,000, மூன்றாம் பரிசாக ரூ. 2,000 வழங்கப்படும்.

தொடர்ந்து, 200 ஆதரவற்ற ஏழைகளுக்கு புத்தாடை, 200 பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உதவ விரும்புவோர், தங்களால் இயன்ற அரிசி, மளிகை, காய்கறி, கல்வி உபகரணங்கள், பரிசுத் தொகை, புத்தாடைகள் வழங்கலாம்.
ஏற்பாடுகளை விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகை மேனேஜிங் டிரஸ்டி அண்ணாமலை, பலராமன், பாரதி, சரவணபவன், ராமலிங்கம், பன்னீர்செல்வம், வேல்முருகன், சிவக்குமார், சக்திவேல், வாசுதேவன் செய்து வருகின்றனர்.மேலும் விபரங்களுக்கு 99948 56314, 97895 48600 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X