ஈரோடு : ''சேலம் பசுமை சாலை, எட்டு வழிச்சாலை அல்ல. உச்சநீதிமன்றத்திலேயே, கடந்த அரசு, 6 வழிச்சாலை என 'அபிடவிட்' தாக்கல் செய்துள்ளது. அங்கு சாலை அமைப்பது மாநில அரசுடையது அல்ல. மத்திய அரசின் பணி. அதற்கான முடிவுகளை அவர்கள்தான் எடுப்பர்,'' என, என, அமைச்சர் வேலு தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில், சாலை விபத்து அதிகம் நடக்கிறது. அதற்காகத்தான் சாலை பாதுகாப்பு கூட்டத்தை நடத்தி, தெரிவிக்கப்படும் கருத்துக்களை அனுப்ப கலெக்டரை கேட்டுள்ளோம்.பரனுார் விமான நிலையம் தொடர்பாக, அரசு சார்பில் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நானும், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பரசு ஆகியோர், 13 பஞ்., மக்களிடம் குறைகளை கேட்டோம். அதில், அரசின் நில மதிப்பீட்டை எடுக்காமல், வெளிச்சந்தை மதிப்பீட்டை போல, மூன்றரை மடங்கு பணம் தரப்படும்.
வீட்டுக்கு ஒரு படித்த பட்டதாரிக்கு அரசு பரிந்துரையுடன் வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும். விமான நிலையத்துக்கு அருகே ஒரே இடத்தில் அனைவரும் வசிக்க வீட்டுக்கு நிலம், வீடு கட்ட பணமும் தரப்படும் என, தெரிவித்துள்ளோம். அவர்களை சமாதானம் செய்துதான் முடிவு எடுப்போம்.
சேலம் பசுமை சாலை, எட்டு வழிச்சாலை அல்ல. உச்சநீதிமன்றத்திலேயே, கடந்த அரசு, 6 வழிச்சாலை என 'அபிடவிட்' தாக்கல் செய்துள்ளது. அங்கு சாலை அமைப்பது மாநில அரசுடையது அல்ல. மத்திய அரசின் பணி. அதற்கான முடிவுகளை அவர்கள்தான் எடுப்பர்.
நெடுஞ்சாலை துறை பணியாளர்களுக்கு, சமூக பிரிவு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கக்கூடாது என, நீதிமன்றம் கூறி உள்ளது. அதற்கான துறையினர், அரசு வக்கீலை அழைத்து, பேசி விரைவில் தீர்வு காண்போம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
எம்.பி.,க்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ.,க்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், சரஸ்வதி, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.