நீர் பயன்படுத்துவோர் சங்க தேர்தல் உயர்நீதிமன்றம் உத்தரவு
Added : செப் 29, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



மதுரை : மதுரை மாவட்டத்தில் சில நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. அனைத்து நில உரிமையாளர்களையும் உள்ளடக்கிய புதிய வாக்காளர் பட்டியலை 3 மாதங்களில் தயாரிக்க வேண்டும். பின் சட்டப்படி சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.



உசிலம்பட்டி கோவிலாங்குளம் சந்திரன் உட்பட சிலரின் மனு:திருமங்கலம் பிரதான கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் மற்றும் திருமங்கலம் நீட்டிப்பு கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியானது. நில உரிமையாளர்கள், நீரினை பயன்படுத்துவோரை வாக்காளர் பட்டியலில் சேர்க்காமல் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டனர்.

இதுபோல் மற்றொரு சங்கம் தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை பாலசுப்பிரமணியன், 'உண்மையான நில உரிமையாளர்கள், விவசாயிகளின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். கலெக்டர் வெளியிட்ட தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்,' என மனு செய்தார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: அழைப்பின் பேரில் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கும் கிளப்கள், சங்கங்கள் உள்ளன. நடிகர் சிவாஜி கணேசன் ஜிம்கானா கிளப்பில் உறுப்பினராக முயன்றபோது, அதை கண்ணியமாக மறுத்ததாக ஒரு கதை உண்டு. இத்தகைய கிளப்கள் காலனித்துவத்தின் மரபுகளை கொண்டவை. அவ்வளாகத்திற்குள் காலணி அணிந்து நுழைய முடியாது. அவர்கள் தீண்டாமையை கடைபிடித்தனர்.
நீதிபதி டி.எஸ்.அருணாச்சலத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது சென்னை உயர்நீதிமன்றத்தின் அப்போதைய நீதிபதி டி.ஹரிபரந்தாமன், மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி மற்றும் என்னையும் சென்னை கிரிக்கெட் கிளப் வளாகத்தை விட்டு வெளியேறுமாறு கூறினர். காரணம், நாங்கள் வேட்டி அணிந்திருந்தோம். இச்சம்பவம் தமிழ்நாடு பொது இடங்களில் நுழையும் (ஆடை மீதான கட்டுப்பாடு நீக்கம்) சட்டம் ( 2014) இயற்றப்படுவதற்கு வழிவகுத்தது.
நீரினை பயன்படுத்துவோர் சங்கம் என்பது ஜிம்கானா கிளப் போன்றோ அல்லது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்ற சங்கங்களைப் போல் இல்லை. அது சட்டப்பூர்வமான தன்மையை கொண்ட அமைப்பு.நீரினை சமமாக வினியோகிப்பதை உறுதி செய்தல், அதிகாரப் பரவலாக்கல், நீர்ப்பாசனத் துறையை சீரமைத்தல் நோக்கத்திற்காக 2001 ல் தமிழக அரசு சட்டம் இயற்றியது.
நீர் பயன்பாட்டு சங்க தேர்தல் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் உள்ளன. வாக்காளர்களின் தந்தை பெயர், பட்டா எண், வயது விபரங்கள் இடம்பெறவில்லை. பட்டா வைத்திருக்கும் பல விவசாயிகள் பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. விதிகள்படி வாக்காளர் பட்டியல் தயாரிக்கவில்லை என மனுதாரர் தரப்பு கூறுகிறது
.சட்டத்தின்படி நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தில் தகுதியுள்ள அனைத்து உறுப்பினர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்வது கலெக்டர்களின் பொறுப்பு. மனுதாரர்கள் குறிப்பிடும் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான தேர்தல் சட்டப்படி நடைபெறாததால் அது ரத்து செய்யப்படுகிறது. விதிப்படி புதிய வாக்காளர் பட்டியலை 3 மாதங்களில் தயாரிக்க வேண்டும். ஆட்சேபனை தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும். பின் சட்டப்படி சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X