செய்திகள் சில வரிகளில் ஈரோடு
Added : செப் 29, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

அஞ்சல் ஊழியர்கள்
ஆர்ப்பாட்டம்
ஈரோடு, செப். 29-
ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள தலைமை தபால் நிலைய வளாகத்தில், தேசிய அஞ்சல் ஊழியர் கூட்டமைப்பு சார்பில், கோட்ட செயலாளர் சத்ருக்கன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 'பி2' ஊழியர் சங்க கோட்ட செயலாளர் வெள்ளியங்கிரி முன்னிலை வகித்தார். இதில், வழக்கமாக அஞ்சல் ஊழியர்

களுக்கு தீபாவளிக்கான போனஸ் வழங்கப்படும். அதற்கு முன், கூட்டமைப்பு உள்ளிட்ட சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். வடமாநிலங்களில் தசராவுக்கு முன்பாகவே போனஸ் வழங்கப்படும். இதுவரை பேச்சுவார்த்தை கூட நடக்கவில்லை. எனவே, உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி போனஸ் வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட, 'டி.ஏ.,'க்களை, தாமதமின்றி வழங்க வேண்டும்,
என வலியுறுத்தினர்.
வீட்டின் முன் மது அருந்த
அனுமதித்தவருக்கு காப்பு
ஈரோடு, செப். 29-
ஈரோடு மேட்டூர் ரோட்டை சேர்ந்தவர் ஆனந்த் ராமகிருஷ்ணன், 57; இவர் கடந்த, 27 மதியம், 12:30 மணிக்கு ஈரோடு பஸ் ஸ்டாண்ட் எதிரே, தனது வீட்டின் அருகே மதுபானம் குடிக்க பொதுமக்களை அனுமதித்ததற்காக, ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார், ஆனந்த் ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.
அரசு ஊழியர்,
ஓய்வூதியர்கள் கருத்தரங்கு
ஈரோடு, செப். 29-
ஈரோட்டில், அனைத்து அரசு துறை ஊழியர்கள், ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், சுதந்திர தினவிழா கருத்தரங்கு நடந்தது. ஓய்வூதியர் ஒருங்கிணைப்பு குழு செயலர் ராமசாமி தலைமை வகித்தார். தொழிற்சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் முன்னிலை வகித்தார். இதில், 'விடுதலை போரில் உழைக்கும் வர்க்கமும், நடுத்தர வர்க்கமும்' என்ற தலைப்பில் எழுத்தாளர் அகத்தியலிங்கமும்; 'தேச பாதுகாப்பில் ஓய்வூதியர் கடமைகள்' என்ற தலைப்பில், ஓய்வூதியர் நல அமைப்பு மாநில துணை தலைவர் சேதுராமன் ஆகியோர் பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் விஜயமனோகரன் நன்றி கூறினார்.
உதவி இயக்குனர்
பொறுப்பேற்பு
ஈரோடு, செப். 29-
ஈரோடு சரக கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனராக ராஜசிவசுப்பிர
மணியன் பொறுப்பேற்றார்.
இவர், இதற்கு முன், நாகர்கோவில் சரக கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். தற்போது, பணி மாறுதல் செய்யப்பட்டு, நேற்று, ஈரோட்டில் பொறுப்பேற்றார்.
'வாக்காளர்' - ஆதார் இணைப்பு முகாம்
ஈரோடு, செப். 29-
ஈரோடு மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலை துாய்மையாக்கும் வகையில், ஆதார்-வாக்காளர் அடையாள அட்டை இணைக்கும் பணி நடந்து வருகிறது. வரும் அக்., 1ல் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 2,222 ஓட்டுச்சாவடி மையங்களிலும், சிறப்பு முகாம் நடக்க உள்ளது. முகாமில் பங்கேற்று, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களிடம், '6பி' படிவம் பெற்று, பூர்த்தி செய்து ஆதார் எண் - வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக்
கொள்ளலாம் என, கலெக்டர்
கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டார்.
தெருநாய்களால்
தொடரும் அவதி
கோபி, செப். 29-
கோபி டவுனுக்குள் படையெடுக்கும் தெருநாய்களால், வாகன ஓட்டிகள் அவதி
யுறுகின்றனர். கோபி மொடச்சூர், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதியில் சுற்றித்திறிந்த, 6 தெருநாய்களை சமீபத்தில் நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். அதன்பின், தெருநாய்கள் பிடிக்கும் பணி சுணக்க
மடைந்துள்ளது. பாரியூர் சாலையில், இறைச்சி கடைகள் அதிகம் என்பதால், அங்குள்ள தெருநாய்கள், கோபி டவுன் பகுதிக்குள் படையெடுக்க துவங்கியுள்ளன. குறிப்பாக பாரியூர் பிரிவு சாலையில், அதிகாலை நேரங்களில் முகாமிட்டு அட்ட
காசம் செய்கின்றன. தெருநாய்களை கட்டுப்படுத்த, நகராட்சி நிர்வாகம்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பச்சமலை முருகன் கோவில்
மலைப்பாதையில் விரிசல்
கோபி, செப். 29-
கோபி, பச்சமலை முருகன் கோவிலுக்கு, மலைப்பாதை வழியாக செல்லும் வழியில், 10 அடி துாரத்துக்கு விரிசல் விழுந்துள்ளது.
கோபியில் பிரசித்தி பெற்ற பச்சமலை முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை வழியில், சில மாதங்களுக்கு முன் விரிசல் விழுந்தது. தற்போது அடிக்கடி பெய்யும் மழையால், மலைப்பாதையில் உள்ள விரிசல், மேலும் பெரிதாகிறது. எனவே, மழைக்காலத்தை கருத்தில் கொண்டு, மலைப்பாதையில் பலவீனமாக உள்ள பகுதிகளை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
'உலக வெறிநோய்' தினம்
நாய்களுக்கு தடுப்பூசி
கோபி, செப். 29-
'உலக வெறிநோய்' தடுப்பு தினத்தை முன்னிட்டு, இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம், கோபி கால்நடை பன்முக மருத்துவமனையில், நேற்று நடந்தது. கால்நடை மருத்துவர் பகவதி முகாமை துவக்கி வைத்தார்.
உதவி மருத்துவர்கள் கதிர்வேல், அலமேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வளர்ப்பு மற்றும் தெருநாய்கள் என, நேற்று ஒரே நாளில் மொத்தம், 73 நாய்களுக்கு, 'ரேபீஸ்' வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.
கூடுதுறையில் 1 டன் கழிவு
சுத்தம் செய்த மாணவர்கள்
பவானி, செப். 29-
புரட்டாசி மகாளய அமாவாசையன்று, பவானி, கூடுதுறைக்கு பரிகாரங்கள் செய்ய வந்த பொதுமக்கள், அவர்கள் பயன்படுத்திய, துணிகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைக்
கழிவுகள், கோவில் வளாகம் முழுவதும்
ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.
இதனை அப்புறப்படுத்தி சுத்தம் செய்வதற்காக, ஈரோட்டில் உள்ள தனியார் கல்லுாரி என்.சி.சி., மாணவ, மாணவியர், 50க்கு மேற்பட்டோர், கூடுதுறைக்கு வருகை புரிந்து, வாகனங்கள் நிறுத்தும் இடம், பரிகார மண்டபம், படிதுறை ஆகிய இடங்களில், 1 டன் அளவிற்கு குப்பைக்கழிவுகளை அகற்றி
சுத்தம் செய்தனர்.

அரங்கநாதர் கோவிலில்
தேர்த்திருவிழா தொடக்கம்
ஈரோடு, செப். 29-
ஈரோட்டில் பிரசித்தி பெற்ற, கஸ்துாரி அரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு, நேற்று காலை, 5:00 மணிக்கு கஸ்துாரி அரங்கநாதர் உற்சவர் சிலைக்கு, திருமஞ்சனம் நடந்தது.
இதில் பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு, கிராமசாந்தி நகர சோதனை வாகன புறப்பாடு வெகு சிறப்பாக நடந்தது. ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், மழையை பொருட்
படுத்தாமல், நீண்ட வரிசையில் காத்திருந்து, கஸ்துாரி அரங்கநாதரை தரிசனம் செய்தனர்.
பைக் திருட்டு
வாலிபர் புகார்
கோபி, செப். 29-
கோபி அருகே, வெள்ளாங்கோவிலை சேர்ந்தவர் கார்த்திகேயன், 27; இன்ஜினியரிங் படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். கடந்த, 23ல், இவருக்கு சொந்த
மான, 'யமஹா' பைக்கை, தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை, 6:30 மணிக்கு பார்த்தபோது, அந்த பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து, சிறுவலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
நிலம் அபகரிப்பு: 3 பேர் மீது வழக்கு
காங்கேயம், செப். 29-
வெள்ளகோவில் அருகே, போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரித்த, மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வெள்ளகோவிலை சேர்ந்தவர் மோகன்ராஜ்; இவருக்கு சொந்தமாக, 45.25 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தை, தங்கராஜ் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக, வெள்ளகோவில் சார்-பதிவாளர் லோகநாதன் விசாரணை நடத்தியதில், வெள்ளகோவில், திருமங்கலத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவர், போலி ஆவணங்கள் மூலம், கரூரை சேர்ந்த மதியழகன் என்பவரை, மோகன்ராஜ் என, ஆள்மாறாட்டம் செய்து, ஆவண பதிவு மேற்கொண்டது தெரிந்தது.
இதுகுறித்து, சார்-பதிவாளர் புகார்படி, தங்க
ராஜ், சித்ரகலா, மதியழகன் ஆகியோர் மீது வெள்ள
கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரித்து வருகின்றனர்.

சமுதாய வளைகாப்பு விழா
டி.என்.பாளையம், செப், 29-
டி.என்.பாளையம் யூனியன், வாணிபுத்துாரில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட இயக்கம் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. திருப்பூர் எம்.பி., சுப்பராயன் குத்து
விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில், 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது. குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட இயக்க அலுவலர் கவுரி, மாவட்ட காங்., தலைவர் சரவணன், டி.என்.பாளையம் யூனியன் தி.மு.க., பொறுப்பாளர் சிவபாலன், வாணிபுத்துார் தி.மு.க., செயலாளர் சேகர், துணை செயலாளர் கதிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
* இதேபோல், பெருந்துறை ஒன்றியம், திங்களூர் சமுதாய நலக் கூடத்தில், 50 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. பஞ்., தலைவர் கீதா
வேலாயுதசாமி தலைமை வகித்து, குத்து விளக்கு ஏற்றி வைத்தார். பெருந்துறை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் சாமி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சூர்யா, திங்களூர் வட்டார ஆரம்ப சுகாதார மருத்துவர் இசைஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டுறவு சிக்கன
கடன் சங்க கூட்டம்
ஈரோடு, செப். 29-
ஈரோடு வருவாய் துறை அலுவலர் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தின் பொது பேரவை கூட்டம் தலைவர் குருராகவேந்திரன் தலைமையில் நடந்தது. செயலாளர் திருமூர்த்தி முன்னிலை வகித்தார். டி.ஆர்.ஓ., சந்தோஷினி சந்திரா பேசினார். இதில், கடன் சங்கத்தின் பங்கு ஈவுத்தொகை குறித்து விளக்கினர். மேலும், கடன் சங்கத்தை மேம்படுத்தும் முயற்சிக்கு, ஒத்துழைக்க வேண்டுகோள்விடுத்தனர். கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி நன்றி கூறினார்.
முற்போக்கு எழுத்தாளர்
சங்க கூட்டம்
ஈரோடு, செப். 29-
ஈரோட்டில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், சமூக நீதி நாள் கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட தலைவர் சங்கரன் தலைமை வகித்தார். துணை தலைவர் சரிதா ஜோ வரவேற்றார். தமிழ்நாடு மக்கள் உரிமை பேரவை ஒருங்கிணைப்பாளர் குறிஞ்சி, த.மு.எ.க.ச., மாவட்ட செயலாளர் கலைக்கோவன், மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, நுாலாசிரியர் நாகராஜன் ஆகியோர் பேசினர்.
வகுப்பறை கட்டடம்
திருப்பூர் எம்.பி., திறப்பு
கோபி, செப். 29-
கோபி அருகே அரசு பள்ளியில், கூடுதல் வகுப்பறை கட்டடத்தை, திருப்பூர் லோக்சபா எம்.பி., சுப்பராயன், நேற்று திறந்து வைத்தார்.
கோபி அருகே, காசிபாளையத்தில் இயங்கும் அரசு துவக்கப்பள்ளியில், திருப்பூர் எம்.பி., நிதியாக, 18.30 லட்சம் ரூபாயில், புதிதாக இரு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. இந்த வகுப்பறையை, திருப்பூர் லோக்சபா எம்.பி., சுப்பராயன், நேற்று திறந்து வைத்தார். அப்போது, இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின், ஒன்றிய செயலாளர்கள்
கனகராஜ், செல்வராஜ் உள்ளிட்ட
நிர்வாகிகள் பங்கேற்றனர்.
உறவினர்கள் இடையே
தகராறு: 2 பேர் கைது
அந்தியூர், செப். 29-
அந்தியூர் அடுத்த, பர்கூர் வனப்பகுதி, ஆலனையை சேர்ந்தவர் மூர்த்தி, 30; இவர், நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியை சேர்ந்த உறவினரான சிந்துமாரி, 40, என்பவரிடம் சென்று, உங்களது தங்கை, தகாத முறையில் நடப்பதாகவும், அவருக்கு தீவா உதவி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதில் தகராறு ஏற்பட்டு, சிந்துமாரி, தீவா, சித்திஸ், ராஜி ஆகிய, 4 பேரும், மூர்த்தியை தாக்கினர். காயமடைந்த மூர்த்தி, பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். புகார்படி, பர்கூர் போலீசார், சித்துமாரி, தீவாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.
அந்தியூர் வாழை ஏலம்
ரூ.5.22 லட்சத்துக்கு விற்பனை
அந்தியூர், செப். 29-
அந்தியூர் அருகே, புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில், வாழை விற்பனை நடந்தது. இதில், கதளி கிலோ, 40 ரூபாய்க்கும், நேந்திரம், 42, செவ்வாழை, 610, பூவன், 400, ரஸ்தாளி, 570, மொந்தன், 570, தேன் வாழை, 470 ரூபாய் என, மொத்தம், 2,500 வாழைத்தார்கள், 5.22 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

ரூ.1.58 கோடிக்கு
கொப்பரை ஏலம்
பெருந்துறை, செப். 29-
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று, கொப்பரை ஏலம்
நடந்தது.
சுற்று வட்டார விவசாயிகள், 4,390 மூட்டைகளில், 2 லட்சத்து, 13 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், கொப்பரை முதல் தரம், குறைந்தபட்சம், ஒரு கிலோ, 74.75 ரூபாய், அதிகபட்சம், 79.30 ரூபாய்; இரண்டாம் தரம், குறைந்தபட்சம், 53.96 ரூபாய், அதிகபட்சம், 77.86 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், 1.58 கோடி ரூபாய்க்கு
கொப்பரை விற்பனையானது.

முகூர்த்த நாட்கள் இல்லாததால்
பூக்கள் விலை சரிந்தது
புன்செய்புளியம்பட்டி, செப். 29-
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில், 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பூக்கள், புன்செய்புளியம்பட்டியில் உள்ள, பூ மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து, பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஆவணி மாதத்தில், ஒரு கிலோ, 3,000 முதல் 4,000 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ, புரட்டாசி
யில், முகூர்த்தங்கள் இல்லாததால், 300 ஆக சரிந்துள்ளது. 700 முதல் 800 ரூபாய்க்கு விற்ற முல்லை, 160 ரூபாய், 200க்கு விற்ற சம்பங்கி, 50 ரூபாயாக விலை குறைந்து விற்பனையானது.
* சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே, பூ மார்க்கெட்டில் நடந்த ஏலத்தில், கனகாம்பரம், 500, மல்லிகை, 350, முல்லை, 180, காக்கடா, 300, செண்டு மல்லி, 32, கோழிகொண்டை, 72, ஜாதிமுல்லை, 350, சம்பங்கி, 50, அரளி பூ, 180, துளசி, 40, செவ்வந்தி, 160 ரூபாய்க்கு விற்பனையானது.
பா.ஜ., மாநில இளைஞரணி
தலைவர் சென்னிமலை வருகை
சென்னிமலை, செப். 29- -----------
பா.ஜ., மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா, தமிழகமெங்கும் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, நேற்று சென்னிமலை ஒன்றியத்துக்கு வருகை தந்து நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக சென்னிமலை வந்த ரமேஷ் சிவா, சென்னிமலை முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, பின், சென்னிமலை வடக்கு ராஜா வீதியில் உள்ள தியாகி கொடிகாத்த குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பஸ் ஸ்டாண்ட் அருகே கட்சிக்கொடி ஏற்றினர். இதில், மாவட்ட தலைவர் செந்தில்குமார், ஒன்றிய தலைவர் சந்திரசேகர் பொதுச்செயலாளர் சுந்தரராசு, வசந்த
குமார், ஒன்றிய துணை தலைவர்கள் தமிழரசன், மதன், மோகனசுந்தரம் இளைஞரணி தலைவர் ரமேஷ், இளைஞரணி மாவட்ட தலைவர் கவின் குமார், உள்ளிட்ட இளைஞரணி நிர்வாகிகளும், ஒன்றிய, மாவட்ட, நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
கர்ப்பிணிகளுக்கு
சமுதாய வளைகாப்பு
புன்செய்புளியம்பட்டி, செப். 29-
புன்செய் புளியம்பட்டியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
மத்திய அரசின், 'போஷன் அபியான்' திட்டம், தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. ஒருங்
கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில், புன்செய்புளியம்பட்டி மற்றும் பவானிசாகர் வட்டார பகுதியில் உள்ள கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி, புன்செய் புளியம்பட்டி தனியார் மண்டபத்தில், நேற்று நடந்தது.
இதில், கர்ப்பிணிகளுக்கு, 5 வகையான ஆரோக்கிய உணவுகள் வழங்கப்பட்டன. புன்செய் புளியம்பட்டி நகராட்சி தலைவர் ஜனார்த்தனன், சீர்வரிசை பொருட்களை வழங்கினார். மேலும், சத்தான காய்கறிகள் மற்றும் சிறு தானிய உணவுகள் குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X