18 கிராமங்கள் வழிபட்ட கருப்பசுவாமி கோவில் இடிப்பை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்
Added : செப் 29, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கிருஷ்ணகிரி அரு‍கே, 18 கிராமங்கள் வழிபட்டு வந்த கருப்பசுவாமி கோவிலை போலீசார் இடித்து அகற்றியதை கண்டித்து, பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட பெரிய மாரியம்மன் கோவில் அருகே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கருப்பசுவாமி கோவிலை கட்டி மக்கள் வழிபட்டு வந்தனர். இக்கோவிலில் கீழ்புதுார், மேல்புதுார், ராஜாஜி நகர், லைன்கொள்ளை, செல்லாண்டி நகர், பெருமாள் நகர், ஆனந்த நகர், சோமார்பேட்டை, வெங்கடாபுரம், மேல்பட்டி, பூசாரிப்பட்டி, தண்ணீர்பள்ளம் உள்ளிட்ட, 18 கிராம மக்கள் வழிப்பட்டு வந்தனர்.
நீதிமன்ற உத்தரவு

கோவில் கட்டப்பட்டுள்ள நிலம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமானது. கடந்த, 2017ல் இந்த நிலத்தின், 4,708 சதுர அடியை, ஓசூரை சேர்ந்த ராமச்சந்திரனுக்கு, 96 லட்சம் ரூபாய்க்கு வீட்டு
வசதி வாரியம் விற்றது. அந்த இடத்தில் கோவில் உள்ளதால், நிலத்தை கையப்படுத்துவதில் ராமச்சந்திரனுக்கு சிரமம் இருந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கோவிலை அப்புறப்படுத்தி நிலத்தை, ராமச்சந்திரனிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
போலீஸ் குவிப்பு
நேற்று மாவட்ட
எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில், 3 டி.எஸ்.பி.,க்கள், 10 இன்ஸ் பெக்டர்கள் உள்ளிட்ட, 200 போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவைகள் வரவழைக்கப்பட்டன.
கோவில் இடித்து அகற்றம்
கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, 18 கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கோவில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், கோவில் தரப்பினருக்கும், ராமச்சந்திரன் தரப்பினருக்கும் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, நேற்று மாலை, 4:30 மணியளவில் கோவிலின் சுவாமி சிலைகளை இடித்து அகற்றி, பொக்லைன் மூலம் கோவில் ஷெட்டுகளும் அகற்றப்பட்டன. இதை கண்டித்து, பொதுமக்கள் கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பாலம் அருகில், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சாலைமறியல் போராட்டத்தால் பதற்றம் நிலவியது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X