அரசு மருத்துவமனைகளில் இதய தினம் கொண்டாட்டம் | சென்னை செய்திகள் | Dinamalar
அரசு மருத்துவமனைகளில் இதய தினம் கொண்டாட்டம்
Added : செப் 29, 2022 | |
Advertisement
 
Latest district News

சென்னை :சென்னை அரசு மருத்துவமனைகளில், உலக இதய தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.உலக இதய தினம், ஒவ்வொரு ஆண்டும் செப்., 29ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தலைமையில், இதய தினம் கடைபிடிக்கப்பட்டது.'மனித நேயத்திற்காக இதயத்தை உபயோகிப்போம், இயற்கைக்காக இதயத்தை உபயோகிப்போம்' என்ற கருப்பொருளுடன், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, மருத்துவமனை துாய்மை பணியாளர்களிடம் இதயத்தை காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

அதேபோல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மணி தலைமையில், இதயவியல் துறை சார்பில், விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியில், புகை பிடித்தலை தவிர்ப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு டாக்டர்கள், நர்ஸ்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதுகுறித்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் மணி கூறியதாவது:நல்ல உணவு, உடற்பயிற்சி, நல்ல உறக்கத்தை கடைபிடித்தால் இதய பாதிப்பு இல்லாமல் வாழலாம். புகை பழக்கத்தை கைவிட்டு, உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டும். பழங்கள், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிகளவில் சாப்பிட்டால், இதய பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.

துரித உணவு சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். சைக்கிள், நடைபயணம் மேற்கொள்வது நல்லது.இவ்வாறு அவர் கூறினார்.அதேபோல், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதல்வர் சாந்திமலர் தலைமையிலும், ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பாலாஜி தலைமையிலும், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் தலைமையிலும் உலக இதய தினம் கடைபிடிக்கப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X