கிண்டி தொழிற்பேட்டையில் சட்டவிரோத குப்பைக் கிடங்கு உற்பத்தியில் ஈடுபட முடியாத நிலையில் நிறுவனங்கள் 
Added : செப் 29, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

சென்னை :கிண்டி சிட்கோ தொழிற்பேட்டையின் வடகிழக்கு பகுதியில், அடையாறு கரையை ஒட்டிய காலி நிலத்தில், சட்ட விரோதமாக குப்பை கொட்டப்படுதவால், மிகப் பெரிய குப்பை கிடங்கு உருவாகி வருகிறது. இதனால், அப்பகுதி தொழிற்சாலைகள் உற்பத்தியில் ஈடுபட முடியாத அளவிற்கு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.



துர்நாற்றம்



கிண்டி, திரு.வி.க., தொழிற்பேட்டை, 404 ஏக்கர் பரப்பளவில், 1958ல் உருவாக்கப்பட்டது. துவக்கத்தில், சிறு, குறு நிறுவனங்களின் எண்ணிக்கை ௨௦௦ ஆக இருந்தது. தற்போது, 600 ஆக அதிகரித்துள்ளன. இது தவிர, தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உட்பட, பல்வேறு அரசு அலுவலகங்களும் இப்பகுதியில் செயல்பட்டு வருகின்றன.இந்த தொழிற்பேட்டையில் சேரும் குப்பையை அகற்றவும், தொழிற்பேட்டையை பராமரிக்கும் பணியிலும் சிட்கோ நிறுவனமே ஈடுபட்டிருந்தது. தற்போது, தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், இந்த பணியை மேற்கொண்டு வருகிறது.இந்த நிலையில், கிண்டி சிட்கோ தொழிற்பேட்டையின் வடகிழக்கு பகுதியில், அடையாறு கரையை ஒட்டிய சிட்கோவின் காலி நிலத்தில், தொழிற்பேட்டையின் அனைத்து குப்பையும் கொட்டப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு சிட்கோ தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் கூறியதாவது:சிறு, குறு உற்பத்தி நிறுவனங்களாக, கிண்டி சிட்கோ தொழிற்பேட்டையில் செயல்பட்டு வருகிறோம். தொழிற்பேட்டையின் வடகிழக்கு பகுதியான, ஈக்காட்டுதாங்கல் பகுதியில், அடையாறு கரையோரம் எங்களது நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.ஆறு பாயும் கரையை ஒட்டி, ௨ ஏக்கர் அளவிலான சிட்கோவின் காலி நிலம் உள்ளது.இந்த காலி நிலத்தில், தொழிற்பேட்டையின் கழிவுகள் அனைத்தும் லாரியிலும், மினி சரக்கு ஆட்டோக்களிலும் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன.மாநகராட்சியால் அனுமதிக்கப்பட்ட குப்பை கிடங்குகள், பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ளன. சட்டவிரோதமாக தொழிற்பேட்டை பகுதியில் உருவாக்கப்பட்டு உள்ள குப்பை கிடங்கிலிருந்து அதிக துர்நாற்றம் வீசுகிறது. அங்கு அமைந்துள்ள நிறுவனங்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மூச்சுத் திணறல், வாந்தி, மயக்கம் உட்பட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.நிம்மதியாக சாப்பிடக் கூட முடியாத நிலை உள்ளது. இதனால், தொழிற்சாலைகளுக்கு அடிக்கடி விடுப்பு விடக் கூடிய சூழல் உள்ளது.



உரிய நடவடிக்கை



கொரோனாவில் பாதிக்கப்பட்டிருந்த நிறுவனங்கள், தற்போது தான் மீளத் துவங்கியுள்ளன. இந்த நிலையில், குப்பை பிரச்னையால் உற்பத்தி பாதிப்புக்கு தள்ளப்பட்டு உள்ளோம். எனவே, இந்த குப்பை கிடங்கை அகற்றி, நிறுவனங்கள் நிம்மதியாகவும், சுகாதாரமாகவும் தொழிலை நடத்த, சிட்கோ நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, தமிழ்நாடு சிட்கோ நிர்வாக இயக்குனர் எஸ்.மதுமதியிடம் கேட்ட போது, ''இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்டும்; அதற்கு அவகாசம் பிடிக்கும்,'' எனக் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X