திருவாலங்காடு:திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான கோதண்டராம சுவாமி கோவில் நெடும்பரத்தில் உள்ளது.
1,000 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலின் திருக்குளம், 2 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இந்த குளம் ஒன்றிய நிர்வாகத்தால், 15 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது. பின், புதுபொலிவுடன் காணப்பட்ட குளத்தை, திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் குளிப்பதற்கு பயன்படுத்தினர்.நான்கு ஆண்டுகளாக பராமரிப்பின்றி குளம் சீரழிந்து வருகிறது.
அதேபோன்று குளத்தின் மைய மண்டபத்தில், செடிகள் முளைத்து ஆங்காங்கே விரிசல் விட்டு காணப்படுகிறது. இதனால் மைய மண்டபம் உடைந்து விழும் நிலையில் உள்ளது. இந் நிலையில், இந்த கோவிலின் குளத்தை சீரமைக்க, திருத்தணி கோவில் அதிகாரிகள் முன் வர வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.