சூலுார்:பதுவம்பள்ளி கிராமத்தில், வரும் அக்.,12ம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.வருவாய்த்துறை சார்பில், ஆண்டு தோறும் மனுநீதி நாள் நடப்பது வழக்கம். கலெக்டர் தலைமையில் மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும். கொரோனா பாதிப்பால், கடந்த இரு ஆண்டுகளாக, இந்த கூட்டம் நடத்தப்படவில்லை.இந்த மனுநீதி நாள் முகாம், மக்கள் தொடர்பு முகாம் எனும் பெயரில் சூலுார் தாலுகா கருமத்தம்பட்டி அடுத்த பதுவம்பள்ளி கிராமத்தில் வரும், அக்., 12ம் தேதி நடக்கிறது. கலெக்டர் சமீரன் தலைமையில், காலை, 10:00 மணிக்கு,நடக்கும் இம்முகாமில், அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்ற உள்ளனர். முகாமில் நலத்திட்ட உதவிகள் பெறுவோரின் பட்டியல் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.