'நுாறு நாள் வேலையாவதுஎனக்கு கொடுங்கள்' காங்., பெண் கவுன்சிலர் கூறியதால் பரபரப்பு
Added : செப் 30, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

திருத்தணி:திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில், கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம் சேர்மன் தங்கதனம் தலைமையில் நடந்தது.ஒன்றிய குழு துணைத் தலைவர் ரவி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்பாபு வரவேற்றார். கூட்டத்தில் வரவு- - செலவு கணக்குகள் சரி பார்க்கப்பட்டன.


அதை தொடர்ந்து கவுன்சிலர் கூட்டத்தில் நடந்த விவாதம்:
காங்., - கலைச்செல்வி: ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பொது நிதியிலிருந்து ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளுவதற்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்து எங்களுக்கு பணிகள் வழங்குவதில்லை. இதனால் எங்களுக்கு போதிய வருமானம் இல்லை. எனவே, எனக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், நுாறு நாள் வேலை வழங்கினால், எனக்கு வாரா வாரம் பணம் வரும்.

எஸ். அக்ரஹாரம் கிராமத்தில் சேதமடைந்த அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்
.பி.டி.ஓ., - மகேஷ்பாபு: விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து அங்கன்வாடி மையம் கட்டித் தரப்படும்.
பா.ம.க., - வினாயகம்: ஒன்றிய பொதுநிதியில் இருந்து, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஐந்து ஊராட்சிகளில் ஆர்.ஓ., வாட்டர் பொருத்தப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஊராட்சியிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவில்லை. எப்போது பயன்பாட்டிற்கு வரும்.
பி.டி.ஓ., - மகேஷ்பாபு: மின் இணைப்பு வழங்குவதில் காலதாமதம். இணைப்பு கிடைத்தவுடன் ஐந்து ஊராட்சிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.
அ.தி.மு.க.,   -   வேலு: கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில், புதிய பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.எப்போது டெண்டர் விடப்படும் என, ஒன்றிய மேலாளரிடம் கேட்கும் போது, நீங்கள் தி.மு.க., ஒன்றிய செயலரிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள் என கூறுகிறார். ஒன்றிய அலுவலகமா, தி.மு.க., கட்சி அலுவலகமா.
பி.டி.ஓ., - மகேஷ்பாபு: இது போன்ற தவறுகள் இனிவரும் நாட்களில் நடக்காது.
நீலா - தி.மு.க.,: ஊராட்சிகளில் அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து ஆய்வு நடத்துவது குறித்து எங்களுக்கு முன்கூட்டியே தெரிவிப்பதில்லை. அதே போல் ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்தும் எனக்கு தகவல் தெரிவிப்பதில்லை.
பி.டி.ஓ., - மகேஷ்பாபு: தகவல் தெரிவிக்கப்படும்.இவ்வாறு ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் விவாதம் நடந்தது.முடிவில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு நன்றி கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X