திருத்தணி:திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில், கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம் சேர்மன் தங்கதனம் தலைமையில் நடந்தது.ஒன்றிய குழு துணைத் தலைவர் ரவி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்பாபு வரவேற்றார். கூட்டத்தில் வரவு- - செலவு கணக்குகள் சரி பார்க்கப்பட்டன.
எஸ். அக்ரஹாரம் கிராமத்தில் சேதமடைந்த அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்
.பி.டி.ஓ., - மகேஷ்பாபு: விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து அங்கன்வாடி மையம் கட்டித் தரப்படும்.
பா.ம.க., - வினாயகம்: ஒன்றிய பொதுநிதியில் இருந்து, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஐந்து ஊராட்சிகளில் ஆர்.ஓ., வாட்டர் பொருத்தப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஊராட்சியிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவில்லை. எப்போது பயன்பாட்டிற்கு வரும்.
பி.டி.ஓ., - மகேஷ்பாபு: மின் இணைப்பு வழங்குவதில் காலதாமதம். இணைப்பு கிடைத்தவுடன் ஐந்து ஊராட்சிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.
அ.தி.மு.க., - வேலு: கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில், புதிய பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.எப்போது டெண்டர் விடப்படும் என, ஒன்றிய மேலாளரிடம் கேட்கும் போது, நீங்கள் தி.மு.க., ஒன்றிய செயலரிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள் என கூறுகிறார். ஒன்றிய அலுவலகமா, தி.மு.க., கட்சி அலுவலகமா.
பி.டி.ஓ., - மகேஷ்பாபு: இது போன்ற தவறுகள் இனிவரும் நாட்களில் நடக்காது.
நீலா - தி.மு.க.,: ஊராட்சிகளில் அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து ஆய்வு நடத்துவது குறித்து எங்களுக்கு முன்கூட்டியே தெரிவிப்பதில்லை. அதே போல் ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்தும் எனக்கு தகவல் தெரிவிப்பதில்லை.
பி.டி.ஓ., - மகேஷ்பாபு: தகவல் தெரிவிக்கப்படும்.இவ்வாறு ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் விவாதம் நடந்தது.முடிவில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு நன்றி கூறினார்.