செஞ்சி : மது பாட்டில் கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சத்தியமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் செந்தாமரைச்செல்வன் மற்றும் போலீசார் நேற்று மாலை 5:00 மணியளவில் ஆலம்பூண்டி பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு, சந்தேகப்படும்படி நின்றிருந்த பெண்ணை சோதனை செய்தனர். அதில் அவர், மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது.விசாரணையில், மதுராந்தகத்தைச் சேர்ந்த கதிர்வேல் மனைவி சந்தியா, 40; என தெரிந்தது. உடன் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 73 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.