திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 'அறிவோம் நம் தேசப்பிதா' என்ற தலைமைப்பில் மாணவர்களுக்கான வினாடி - வினா போட்டி நடந்தது.
தலைமை ஆசிரியர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். கல்வியாளர் ஜானகிராமன் வினாடி - வினா போட்டியை நடத்தினார்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் நாகமணி நன்றி கூறினார்.