விழுப்புரம் : பெண் வி.ஏ.ஓ.,வைத் தாக்கிய கணவர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்தவர் முரளிதரன் மனைவி சுமதி, 41; திருப்பாச்சனுார் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிந்து வருகினார்.இவரது முதல் கணவர் வெங்கடேசன் இறந்து விட்டதால், முரளிதரனை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.சுமதியிடம், தொழில் தொடங்கப் போவதாகக் கூறி, 18 லட்சம் பணம் மற்றும் 40 சவரன் நகையை முரளிதரன் வாங்கியுள்ளார்.இதையடுத்து, கடந்த ஜனவரி, 25ம் தேதி விஜயலட்சுமி, 31; என்பவரை முரளிதரன் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
கடந்த 10ம் தேதி பணம் மற்றும் நகையை கேட்ட சுமதியை, முரளிதரன், விஜயலட்சுமி மற்றும் கெங்கராம்பாளையத்தைச் சேர்ந்த முரளிதரன் தந்தை ராமச்சந்திரன், தாய் வள்ளி ஆகியோர் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின்பேரில், முரளிதரன் உட்பட 4 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.