திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தலைமையில் பெட்டிக் கடைகளில் புகையிலை பொருட்கள் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.
திருக்கோவிலுார் பஸ் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் புகை பிடித்தல் மற்றும் பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என, ஜீ அரியூர் ஆரம்ப சுகாதார வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.பஸ் நிலையத்தில் நான்கு பெட்டிக் கடைகளில் புகைப்பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி என்ற பதாகை வைக்காத உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
பொது இடத்தில் புகை பிடித்த இரண்டு பேருக்கு தல நுாறு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் சங்கர், வெங்கடேஷ், சண்முகசுந்தரம், முத்தமிழ், சுப்பையா உள்ளிட்ட சுகாதார அலுவலர்கள் உடனிருந்தனர்.