கடலுார் : கடலுார் எம்.எல்.ஏ., அய்யப்பன் தனது மகன் டாக்டர் பிரவின் அய்யப்பனின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கினார்.
கடலுார் எம்.எல்.ஏ., அய்யப்பன் மகனும், தி.மு.க., பிரமுகருமான டாக்டர் பிரவின் அய்யப்பனின் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சாய்பாபா கோவிலில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அய்யப்பன் எம்.எல்.ஏ., மற்றும் லீமா அய்யப்பன், வினோத் அய்யப்பன், அருள்மொழி வினோத் ஆகியோர் , பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
நிகழ்ச்சியில், ரவிச்சந்திரன், தினகரன், அழகப்பா ராஜகோபால், வக்கீல் சுந்தர், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் பிரகாஷ், தமிழரசன், சரத், கர்ணன், கீர்த்தனா, பாரூக் அலி, ராதிகா, மகேஸ்வரி, சுமதி, ஊராட்சித்தலைவர்கள் மனோகரன், பிரகாஷ், துணைத் தலைவர் சாந்தி பழனிவேல், ரமேஷ், பாரத், ராஜா, சன் பிரைட் பிரகாஷ், ராஜா, ரோட்டரி ராசன் பங்கேற்றனர். டாக்டர் பிரவின் அய்யப்பனுக்கு, ஏராளமான தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள், டாக்டர்கள், தொழிலதிபர்கள் நேரில் வாழ்த்து கூறினர்.