ஈரோடு மாவட்டத்திலும் ஒரு 'கல்யாண ராணி' 5வது திருமணத்துக்கு ஆசைப்பட்டு அகப்பட்டார்
Added : செப் 30, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

ஈரோடு:கரூர், பரமத்தி வேலுாரை தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்திலும், ஐந்தாவது திருமணத்திற்கு தயாரான, 'கல்யாண ராணி' சிக்கியுள்ளார்.கரூர் பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட திருமணம் செய்து, ஆண்களை அநியாயமாக மோசடி செய்த சவுமியா; நாமக்கல் மாவட்டத்தில், ௧௨க்கும் மேற்பட்ட திருமணங்களை செய்து, வாய் பிளக்க வைத்த சந்தியாவை மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டரார்கள்..



'வாய்ஸ் மெசேஜ்'



அதுபோல, ஈரோடு மாவட்டத்தில், சரவணன் என்ற அப்பாவியை திருமணம் செய்து ஏமாற்றிய மற்றொரு, 'கல்யாண ராணி' சரிதா தற்போது சிக்கியுள்ளார்.சரவணனை நான்காவது திருமணம் செய்து, குடும்பம் நடத்தி வந்த நிலையில், ஐந்தாவது திருமணத்துக்கு அந்த பெண் ஆசைப்பட்டதால், சரவணன் மற்றும் அவரது உறவினர்கள் திட்டமிட்டு, 'சரிதா அண்டு கோ'வை பிடித்தனர்
இதுகுறித்த விபரம் வருமாறு:ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம், டி.ஜி.புதுாரைச் சேர்ந்த நெசவு தொழிலாளி சரவணன், 35. இவருக்கும் சரிதா, 32, என்ற பெண்ணுக்கும் ஆக., 29ல் திருமணம் நடந்தது.உறவினரான சத்தியமங்கலத்தைச் சேர்ந்த புரோக்கர் மலர் என்பவர் பெண் பார்த்து திருமண ஏற்பாடு நடந்தது.

விருதுநகரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற தரகர் மூலம் சரிதாவை மலர் ஏற்பாடு செய்தார்.பெற்றோர் இல்லை; ஈரோடில் தனியார் கம்பெனியில் சரிதா வேலை செய்கிறார் என்று மட்டும் தெரிவித்துள்ளனர்.சில நாட்களுக்கு முன் சரிதாவின் மொபைல்போனில் இருந்து, தரகர் விஜயலட்சுமிக்கு, 'வாய்ஸ் மெசேஜ்' சென்றுள்ளது. சந்தேகமடைந்த சரவணன், அதை ரகசியமாக கேட்டுள்ளார்.



ஏமாந்த கதை



அதில், 'என்னை வந்து அழைத்துச் செல்லுங்கள்; இங்கிருந்தால் சம்பாதிக்க முடியாது. வேறு ஒரு வயதான ஆணை பாருங்கள்...' என, சரிதா பேசியிருந்தார்.அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சரவணன், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தான் ஏமாந்த கதையை தெரிவித்துள்ளார்.

சரிதா உள்ளிட்ட கும்பலை ரகசியமாக பிடிக்க அவர்கள் திட்டமிட்டனர்.'என் நண்பருக்கு அவசரமாக ஒரு பெண் பார்க்க வேண்டும். விதவையாக இருந்தாலும் பரவாயில்லை' என்று சரவணன் தன் மனைவி சரிதாவிடம் கூறினார். இதை உண்மை என நம்பிய சரிதா, தரகர் விஜயலட்சுமியிடம் தெரிவித்தார்.உடனே களத்தில் இறங்கிய அந்த மோசடி கும்பல், திருமணமான விஜயா என்ற பெண்ணை, திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

அதற்கு தரகு கமிஷனாக, 80 ஆயிரம் ரூபாய் பேரம் பேசியுள்ளனர்; அதற்கு சரவணன் ஒப்புக்கொண்டார்.நேற்று முன்தினம் திருமணம் செய்ய முடிவாகி, வாடகை காரில் விஜயாவுடன், விஜயலட்சுமி வந்திறங்கினார். அன்றிரவு சரவணன் வீட்டில் அனைவரும் தங்கினர்.இந்நிலையில், இந்த கும்பலின் சதிச் செயல் பற்றி, பங்களாபுதுார் போலீசுக்கு சரவணன் தகவல் தர, போலீசார் அங்கு சென்றனர்.
சரிதா, விஜயலட்சுமி, விஜயா ஆகியோரிடம் விசாரித்தனர். அப்போது, சரிதா - விஜயலட்சுமி கூட்டணி, பல ஆண்களை திருமணம் செய்து மோசடி செய்தது அம்பலமாகவே, சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.
அங்கு நடந்த, 'விசாரணையில்' திருப்பூர் மாவட்டம், முத்துாரைச் சேர்ந்த லாரி டிரைவர் உள்ளிட்ட மூன்று பேரை ஏமாற்றி சரிதா கும்பல் திருமண மோசடி செய்தது தெரிந்தது. அப்பாவி சரவணனை நான்காவதாக திருமணம் செய்த நிலையில், ஐந்தாவது திருமணத்துக்கு திட்டமிட்டு, விஜயலட்சுமிக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜால், அந்த கும்பல் சிக்கியது.
இதுபற்றி சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் இந்திராணி சோபியா கூறுகையில், ''சரிதா ஏற்கனவே நான்கு திருமணம் செய்த மோசடி தொடர்பாக விசாரணையை துவக்கியுள்ளோம். பல குற்றங்களில் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது,'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X