போலீஸ் செய்திகள்... | மதுரை செய்திகள் | Dinamalar
போலீஸ் செய்திகள்...
Added : செப் 30, 2022 | |
Advertisement
 



திருடன் கைது




கொட்டாம்பட்டி: சிவகங்கை மாவட்டம் மட்டங்குளம் பொன்னையாவை 27, கொட்டாம்பட்டி பகுதியில் போலீசார் கைது செய்தனர். டூவீலர்களை திருடியதாக இவர் மீது மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.



ஓய்வு எஸ்.ஐ., வீட்டில் திருட்டு



திருமங்கலம்: மாயோன் நகர் பாஸ்கரன் 68. ஓய்வு பெற்ற எஸ்.ஐ.,யான இவர், பெங்களூரில் உள்ள மகள் வீட்டிற்கு செப்.,17ல் குடும்பத்துடன் சென்றார். நேற்று வீட்டுக்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 5 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.



லாரியில் மோதி பலி



திருமங்கலம்: கிழவனேரி சதீஷ்குமார் 23. தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து டூவீலரில் (ஹெல்மெட் அணிந்திருந்தார்) ஊருக்கு சென்றார். திருமங்கலம் - ராஜபாளையம் ரோட்டில் முன்னால் சென்ற லாரி திடீரென நின்றது. அதில் மோதி சதீஷ்குமார் இறந்தார்.



'போக்கோ'வில் வழக்கு



பேரையூர்: கொட்டாணிப்பட்டி பால்பாண்டி 23. இவர் காரைக்கேணி 14 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். டி.கல்லுப்பட்டி ஊர் நல அலுவலர் கருப்பாயி புகாரில் பால்பாண்டி மீது 'போக்சோ' வழக்கில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.



மது விற்றவர் கைது



பேரையூர்: சென்னம்பட்டி ராசு 45. அதே ஊரில் வீட்டில் மது விற்றதாக கைது செய்யப்பட்டார். 17 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X