திருமங்கலம் --திருமங்கலம் கடை வீதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து மதுரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அங்கு 50 கிலோ எடை கொண்ட 63 மூடைகளில் 3150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அரிசியை பறிமுதல் செய்த போலீசார் பதுக்கி தலைமறைவான தெலுங்கர் தெருவை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரை தேடி வருகின்றனர்.