மதுரை--மதுரை கல்லுாரியில் பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு நடந்த மோடி கபடி லீக் இறுதிப் போட்டியில் சேலம் கிழக்கு அணி சாம்பியன் சாம்பியன் பட்டம் வென்றது
.நேற்று நடந்த சுற்றுப் போட்டிகளில் செங்கல்பட்டு அணியை திருநெல்வேலி அணி 20-39 என்ற புள்ளி கணக்கில் வென்றது. சேலம் மேற்கு அணி விருதுநகர் மேற்கு அணியை 29-22 என்ற புள்ளி கணக்கில் வென்றது. கன்னியாகுமரி அணி நாமக்கல் அணியை 30-28 என்ற புள்ளி கணக்கில் வென்றது. சேலம் கிழக்கு அணி ராமநாதபுரம் அணியை 44-30 என்ற புள்ளி கணக்கில் வென்றது.கன்னியாகுமரி அணி 47 - 23 என்ற புள்ளிகளில் செங்கல்பட்டு அணியை வீழ்த்தியது. சேலம் கிழக்கு 23 - 21 என்ற புள்ளிகளில் சேலம் மேற்கு அணியை வீழ்த்தியது. திருநெல்வேலி அணி நாமக்கல் அணியை 36-22 என்ற புள்ளி கணக்கில் வென்றது. சேலம் மேற்கு அணி ராமநாதபுரம் அணியை 29-25 என்ற கணக்கில் வென்றது. திருநெல்வேலி அணியை கன்னியாகுமரி அணி 33-38 என்ற புள்ளி கணக்கில் வென்றது. விருதுநகர் மேற்கு அணியை சேலம் கிழக்கு அணி 26-38 என்ற புள்ளி கணக்கில் வென்றது.
அரையிறுதி
முதல் அரையிறுதி போட்டியில் சேலம் மேற்கு அணி 39 - 26 என்ற புள்ளிகளில் கன்னியாகுமரி அணியை வீழ்த்தியது. 2வது அரையிறுதியில் சேலம் கிழக்கு அணி 36 -- 25 என்ற புள்ளிகளில் திருநெல்வேலி அணியை வீழ்த்தியது.இறுதி போட்டியில் சேலம் கிழக்கு அணி 32-- 30 என்ற புள்ளிகளில் சேலம் மேற்கு அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.சேலம் கிழக்கு அணிக்கு ரூ. 15 லட்சமும், 2ம் இடம் பெற்ற சேலம் மேற்கு அணிக்கு ரூ. 10 லட்சமும், 3, 4 இடங்களை பெற்ற கன்னியாகுமரி, திருநெல்வேலி அணிகளுக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது. பரிசுகளை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வழங்கினார்.அவர் பேசியதாவது: தமிழகத்தின் மயிலாடுதுறையில் 'கபடி ஸ்கூல் ஆப் எக்சலென்ஸ்' பள்ளி அமைப்பது பா.ஜ.,வின் கடமை. அடுத்த ஆண்டும் கபடி லீக் போட்டிகள் நடத்தப்படும், என்றார். பா.ஜ., விளையாட்டு, திறன்மேம்பாடு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, மாவட்டத் தலைவர் மகாசுசீந்திரன், அமெச்சூர் கபடிகழக தலைவர் சோலைராஜா பங்கேற்றனர்.