பொள்ளாச்சி, கோபாலபுரத்தில் இருந்து நேற்று முன்தினம் பயணித்த தனியார் பஸ், அய்யம்பாளையம் அருகே வந்த போது, கோபாலபுரம் நோக்கி சென்ற சரக்கு வேன் மீது மோதி கவிழ்ந்தது.சரக்கு வேனில் பயணித்த, நல்லுார் நடராஜ், 55, டி.நல்லிக்கவுண்டன்பாளையம் கிட்டுசாமி, 50 ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். விபத்தில், 34 பேர் காயமடைந்தனர்.பஸ்சில் பயணித்த தாவளத்தை சேர்ந்த பார்வதி, 48, கோவை அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பலனின்றி பலியானார். இதையடுத்து, விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை, மூன்றாக உயர்ந்தது.