வங்கியில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை முயற்சி: எல்லை பாதுகாப்பு படை வீரருக்கு 7 ஆண்டு சிறை
Added : செப் 30, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



திருநெல்வேலி : திருநெல்வேலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஊழியர்கள் இருவரை சுட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்பு படை வீரருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.12,000 அபராதமும் விதித்து கோர்ட் உத்தரவிட்டது.



திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே தளபதி சமுத்திரம் கீழூரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் 41. 2011ல் மேகாலயா மாநிலம் துாரா எல்லை பாதுகாப்பு படையில் வீரராக பணியாற்றினார். 2011 ஏப்ரலில் விடுமுறையில் வந்தவர் அங்கிருந்து அனுமதியின்றி இன்சாஸ் வகை துப்பாக்கியையும் தோட்டாக்களையும் எடுத்து வந்து விட்டார்.

2011 மே 2ல் நாங்குநேரியை சேர்ந்த தாயப்பன் என்பவருடன் சேர்ந்து கொண்டு முகமூடி அணிந்து, அதே பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்குள் சென்று கொள்ளையடிக்க முயற்சித்தனர். தடுத்த வங்கி ஊழியர் சண்முக சங்கரை துப்பாக்கியால் சுட்டார். கிளார்க் ராஜாவிற்கும் காயம் ஏற்பட்டது. பன்னீர்செல்வம் உட்பட இருவரையும் ஏர்வாடி போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் தாயப்பன் உடல் நலம் பாதித்து இறந்து விட்டார். வழக்கு நாங்குநேரி கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்தது. நீதிபதி ராமதாஸ், பன்னீர் செல்வத்திற்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X