விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பி.எஸ்.கே., மணிநகரில் வீட்டை அபகரித்த திருநெல்வேலி தம்பதி மீது குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அவரின் மனைவி பெயரிலான அந்த வீட்டை அடமானம் வைத்து, 27 லட்சம் ரூபாய் கடன் பெற்று, அதில், 10 லட்சம் ரூபாயை மட்டும் கிருஷ்ணனிடம் கொடுத்து, வீட்டை அபகரித்து விட்டனர். தாமதமாக இதுகுறித்து அறிந்த கிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் செய்தார். பாலக்குமார், கீதா மீது குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.