காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., 9வது வார்டுக்கு உட்பட்ட சாம்சன்பேட்டையில், அரசு தொடக்கப்பள்ளி உள்ளது.
இப்பள்ளி அருகில், அகற்றப்படாத குப்பையால் துர்நாற்றம் வீசி, மாணவர்கள் அவ்வழியாக பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், சாலை மோசமான நிலையில் இருப்பதாகவும், அப்பகுதி மக்கள் டவுன் பஞ்., தலைவர் அம்சவேணி செந்தில்குமாரிடம் புகாரளித்தனர்.
இதையடுத்து அங்கிருந்த குப்பையை அகற்றிய டவுன் பஞ்., தலைவர், அப்பகுதியில், சுமார், 10 மீ., அளவில் சொந்த செலவில் சிமென்ட் சாலை அமைத்து தந்தார். குப்பை எடுக்கும் வண்டிகளில் மக்கும், மக்கா குப்பைகளை பிரித்து வழங்குமாறு கேட்டு கொண்டார். டவுன் பஞ்., உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வி, நித்யா, கோகுல்ராஜ், கீதா உட்பட பலர் உடனிருந்தனர்.