புகார் பெட்டி...:காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
புகார் பெட்டி...:காஞ்சிபுரம்
Added : அக் 01, 2022 | |
Advertisement
 
Latest district News

நடுரோட்டில் பள்ளம்வாகன ஓட்டிகள் அச்சம்

சின்ன காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் விளக்கடி கோவில் தெரு வழியாக செல்கின்றன. உத்திரமேரூர், வந்தவாசி செல்லும் வாகனங்களுக்கும் இந்த சாலை வழியாகவே சென்று வருகின்றன. வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகம் உள்ள விளக்கடி கோவில் தெருவில் மழையின் காரணமாக சாலையின் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்தும், திடீரென 'பிரேக்' போடும்போதும் பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, விளக்கடி கோவில் தெருவில் சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-எஸ்.பன்னீர்செல்வம், காஞ்சிபுரம்.

சாலையில் மழை நீர் தேக்கம்

காஞ்சிபுரம் குமார் தெரு -வேகவதி சாலை சந்திப்பு பகுதியில் சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், சாதாரண மழைக்கே மழை நீர் குட்டை போல தேங்குவது வாடிக்கையாக உள்ளது. பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ - -மாணவியர் குமார் தெரு வழியாக செல்ல வேண்டியுள்ளது. சாலையின் இரு புறமும் மழை நீர் தேங்குவதால், ஷூ அணிந்து செல்லும் மாணவ- - மாணவியர் அவதிக்குள்ளாகி வருகின்னறர். மேலும் வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளால் நடந்து செல்வோரின் ஆடைகளில் சேற்று நீர் தெளித்து கறை படிகிறது. எனவே, சாலையை சீரமைத்து மழை நீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.முத்துகுமார், சின்ன காஞ்சிபுரம்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X