பெரியவங்களுக்கு மட்டும் தானா இந்த எக்ஸ்போ என நினைத்துவிடாதீர். குட்டீஸ்க்கு என, தனி ஏரியாவே ஒதுக்கி இருக்கோம். கண்காட்சிக்கு வரும் குட்டீஸ்கள் அடையும் சந்தோஷத்தை அளவிட மடியாது.
குட்டீஸ் ஏரியாவுக்குள் சென்றதும், வாட்டர் ரோலர், பிங்க் ஸ்லைடு, பலுான் சுடுதல் என பல்வேறு விளையாட்டுகள் வரிசை கட்டி உள்ளன.
ஒட்டகச்சவாரி
யானை சவாரி, குதிரை சவாரின்னு போன குழந்தைகளுக்கு, ஒட்டகத்து மேல உட்கார்ந்து சவாரி செல்ல ஆசையாக இருக்கும். குட்டீஸ்களின் ஆசையை நிறைவேற்ற, ஒட்டகசவாரியும் நடக்கிறது. ஒட்டகத்துக்கு மேல ஏறி சவாரி செய்து குட்டீஸ் மனதை குஷிப்படுத்தலாம்.
வாட்டர் போட்டிங்
'ரெடிமேட்' ஏரியில், நிரம்பியுள்ள தண்ணீரில் கைகளால் சுற்றும் படகில் ஜாலியாக சவாரி செய்யலாம். படகில் அமர்ந்து குழந்தைகள் சவாரி செய்வதை குடும்பத்தோடு பார்த்து மகிழலாம். அப்படியே ஒரு போட்டோ எடுத்து, ஸ்டேட்டஸ்ல வைக்கலாம்.
ஹேப்பி பன் சிட்டி
காற்றடித்த பலுான் படுகையில், குதிப்பதற்கும், குகைக்குள் புகுந்து, சறுக்கு விளையாடுவது தான் 'ஹேப்பி பன் சிட்டி'. இந்த அரங்கினுள், இரண்டு வயது முதல், 10 வயதுள்ள குட்டீஸ் விளையாடலாம். இதனை விளையாட துவங்கும் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வது பெற்றோருக்கு பெரிய சவாலாக இருக்கும்.ஒவ்வொரு விளையாட்டிலும் புதுமை கலந்து இருப்பதால், குழந்தைகள் விளையாடுவதற்கு சில மணி நேரம் மட்டுமல்ல, ஒரு நாளே போதாது. அந்தளவுக்கு குட்டீஸ்களுக்கான உலகத்தில், விளையாட்டுகள் படுசுவாரஸ்யமாக இருக்கின்றன. குழந்தைகள் விளையாடு அகம் மகிழ்வதை கண்டு, உங்கள் உள்ளமும் மகிழும்.