வாலாஜாபாத்:வட கிழக்கு பருவ மழை முன்னிட்டு, ஊரக வளர்ச்சி தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் கரூர் ஊராட்சியில் ஆய்வு செய்தார்.
வாலாஜாபாத் ஒன்றியத்தில், வட கிழக்கு பருவ மழைக்கு, வெள்ள தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.நான்காவது வெள்ள தடுப்பு பணிக்குழுவைச்சேர்ந்த ஊரக வளர்ச்சி துறை தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் கீதா மற்றும் வாலாஜாபாத் பி.டி.ஓ., லோகநாதன் ஆகியோர் கரூர் கிராமத்தில், இருளர் குடியிருப்புகளை ஆய்வு செய்தனர். மழைக்காலங்களில் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுரை வழங்கினர். பணி மேற்பார்வையாளர் ராஜசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.