கோவை,:'பிராம்ப்ட் டிரேட் பேர்ஸ்' நிறுவனம் சார்பில், பர்னிச்சர் மற்றும் ேஹாம் புராடக்ட்ஸ் கண்காட்சி, கோவை பீளமேடு, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நேற்று துவங்கியது; நாளை நிறைவடைகிறது.'பிராம்ப்ட் டிரேட் பேர்ஸ்' நிர்வாக இயக்குனர் உதயகுமார் கூறியதாவது:கண்காட்சியில், 100 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. உயர்தர, வெளிநாடு மற்றும் உள்நாட்டு பர்னிச்சர்கள் அதிகளவில் உள்ளன. தேக்கு, கண்ணாடி, பைபர், அக்ரிலிக், மாடுலர், டைனிங், கார்டனிங், மூங்கில் என, ஏராளமான வகைகளில் பர்னிச்சர்கள் இடம்பெற்றுள்ளன.20க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்டுகளின், 750 மாடல்களில் அனைத்து பர்னிச்சர்களுக்கும், 70 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அலுவலகத்துக்கான பர்னிச்சர்களும் ஆடி தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன. சோபா, மடிப்பு நாற்காலியும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. அனைத்து பர்னிச்சர்களுக்கும் மூன்று முதல் ஐந்தாண்டுகள் வரை உத்தரவாதம் உண்டு.நாளை வரை காலை, 10:30 முதல் இரவு, 8:30 மணி வரை நடக்கும் இக்கண்காட்சியில், பர்னிச்சர்கள் மட்டுமின்றி, கிச்சன் கேபினட், வார்ட் ரோப், டைனிங் செட், உள்ளிட்ட, பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களுக்கான அரங்குகளும் உள்ளன. பொருட்களை கிரெடிட், டெபிட் கார்டுகளில் வாங்கிச் செல்லலாம். கடனுதவி வசதியும் உண்டு.இவ்வாறு, அவர் கூறினார்.