போலி ராணுவ வீரர் அடையாள அட்டையைகாட்டி ஆன்லைனில் கார் விற்பனை மோசடி
Added : அக் 01, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் டிராவல் ஏஜென்சி துவங்க முயன்ற ஆட்டோ டிரைவரிடம் போலி ராணுவ வீரர் அடையாள அட்டையை காட்டி ஆன்லைனில் கார் விற்பதாக கூறி ரூ.79 ஆயிரத்து 200 மோசடி செய்யப்பட்டது.
ராமநாதபுரம் அருகே பொட்டகவயல் பசுல் ரகுமான் மகன் முகமது தவ்பீக் அலி 27. சொந்தமாக ஆட்டோ ஓட்டிய இவர், சொந்தமாக டிராவல் ஏஜென்சி துவங்க விரும்பினார். வாகனங்களை வாங்கி விற்கும் இணையதளத்தில் தேடினார். குறிப்பிட்ட ஒரு தளத்தில் இருந்து 2013 மாடல் கார் விற்பனைக்கு இருப்பதாகவும், விலை ரூ.2.90 லட்சம் எனவும், 86065 87258 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் விளம்பரம் வெளியாகியிருந்தது.

அதில் பேசியவர் தான் ஸ்ரீஹான்ஸ் குமார் என்றும், ஐதராபாத் ஆர்மி கேம்ப்பில் பணி புரிவதாகவும், சில மாதங்களுக்கு முன் திருவண்ணாமலையில் இருந்து பணி மாறுதலில் வந்ததாகவும் தெரிவித்தார்.தன் காரை விற்க போவதாக கூறிய நிலையில் ரூ.2.50 லட்சத்திற்கு பேரம் முடிவானது. காருக்கான ஆவணங்கள் ஸ்ரீஹான்ஸ் குமார் பெயரிலுள்ள பதிவு சான்றிதழ் மற்றும் காரின் புகைப்படத்தை அனுப்பினார்.

இணைதளத்தில் ஆவணங்கள் சரியாக இருந்ததால் முன்பணம் ரூ.5000 செலுத்தினார். முகமது தவ்பீக் அலியின் முகவரியை பெற்றவர் ஆர்மி கூரியர் மூலம் கார் லாரியில் அனுப்பப்படும் என்றும் அதற்கான கூரியர் கட்டணம் ரூ.4000 செலுத்தவும் கூறினார்.

போன்-பே மூலம் அதனை செலுத்தினார். மேலும் பல்வேறு கட்டணங்களை கூறி ரூ.79 ஆயிரத்து 200 வரை பெற்றார். பின் கார் மதுரை வந்து விட்டதாகவும், ஜி.எஸ்.டி., ரூ.32 ஆயிரத்து 400 அனுப்ப கூறினார்.இதனால் சந்தேகமடைந்து இணையதளத்தில் தேடிய போது ராணுவ வீரர் என்ற போலி அடையாள அட்டையை காட்டி ஏமாற்றியதை அறிந்தார். இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X