திருப்பூர்:திருமூர்த்தி நகர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் மூன்று நாள் பயிற்சி துவங்கியுள்ளது.திருப்பூர், வீரபாண்டி பிரிவு, காந்தி வித்யாலயம் பள்ளியில், 27ம் தேதி முதல், 29ம் தேதி வரை கருத்தாளர்களுக்கான பயிற்சி நடந்தது. ஒரு பாடத்துக்கு, 72 பேர் வீதம் மொத்தம், 216 பேர் பங்கேற்றனர்.பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி பயிற்சியை துவக்கி வைத்தனர். முதல் நாள் தமிழ், அடுத்தடுத்த நாள் முறையே ஆங்கிலம் மற்றும் கணிதம் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.