கோவை:கோவை மாநகர் மாவட்ட பா.ஜ., தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி நேற்று ஜாமினில் விடுதலையானார்.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் ராஜாவின் பேச்சை கண்டித்து, இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாலாஜி உத்தம ராமசாமி பேசினார். அவரது பேச்சு தொடர்பாக, பீளமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்த போலீசார் அவர் மீது, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்தனர்.அவரை செப்., 21ல் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி, கோவை மாவட்ட கோர்ட்டில் நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டது. நேற்று மாலை பாலாஜி உத்தம ராமசாமி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறை வாயிலில் திரண்டிருந்த ஏராளமான பா.ஜ., தொண்டர்கள், அவருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.