கள்ளக்குறிச்சி, : சின்னசேலம் அருகே மாயமான மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.சின்னசேலம் அடுத்த மேலுாரைச் சேர்ந்தவர் பழனியம்மாள், 67; மனநலம் பாதித்தவர். கடந்த 20ம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.