கடலுார் : ரெட்டிச்சாவடி அருகே, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அய்யப்பன் எம்.எல்.ஏ., வழங்கினார். ரெட்டிச்சாவடி அடுத்த சிங்கிரிகுடியில் மனுநீதி நாள் முகாம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு தலைமை தாங்கினார். தாசில்தார் பூபாலசந்திரன் வரவேற்றார்.அய்யப்பன் எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.
பின், 209 பயனாளிகளுக்கு 15 லட்சத்து 8 ஆயிரத்து 435 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், 'தமிழக முதல்வர் ஸ்டாலின் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கப் பெறாதவர்கள் மனு அளித்தால், பரிசீலனை செய்து கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்' என்றார்.விழாவில் வருவாய் ஆய்வாளர் செல்வக்குமார், கூட்டுறவு சங்கத் தலைவர் ராமலிங்கம், ஊராட்சித் தலைவர்கள் கனகராஜ், பிரகாஷ், நிர்வாகிகள் ஜெயமூர்த்தி, கமலக்கண்ணன் பங்கேற்றனர்.