திண்டிவனம் : திண்டிவனத்தில் அரசு கலைக் கல்லுாரியில் சீட் கிடைக்காத மாணவ, மாணவியர்கள் கதறி அழுது போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.திண்டிவனம், கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரியில் 2022-23ம் கல்வியாண்டிற்கான இளநிலை மாணவர்கள் சேர்க்கைக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு கடந்த 27 மற்றும் 28ம் தேதிகளில் நடந்தது.
இதில் பங்கேற்க வந்த மாணவ, மாணவியர்கள் சிலருக்கு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் அன்றிரவு, சீட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். நேற்று காலை, கல்லுாரிக்கு 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் தங்களது பெற்றோருடன் சென்றனர்.அப்போது அவர்களிடம், ஏற்கனவே, அரசு ஒதுக்கீட்டின்படி, மாணவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் இடங்கள் கிடையாது என கல்லுாரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.இதனால், ஆத்திரமடைந்த மாணவ, மாணவி யர்கள் தங்களது பெற்றோ ருடன், கல்லுாரியை முற் றுகையிட்டு, காலை 11:00 மணியளவில் கல்லுாரி நுழைவு வாயிலில் அமர்ந்து கதறியழுது போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.ரோஷணை போலீசார் மற்றும் கல்லுாரி துணை முதல்வர் நாராயணன் ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில், அரசு ஒதுக்கீட்டின்படி சீட் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் இடம் கிடையாது. இருப்பினும், மீண்டும் அரசிடம் சீட் ஒதுக்கீடு செய்வதற்கு, கல்லுாரி நிர்வாகம் சார்பில், பரிந்துரை செய்கிறோம்.அவ்வாறு இடம் ஒதுக்கீடு செய்தால், விடுபட்ட மாணவர்களுக்கு, சீட் வழங் குவதாக தெரிவித்தனர். இதையடுத்து, மாலை 4:00 மணியளவில் போராட் டத்தை கைவிட்ட மாணவர்கள், தங்களின் விபரங் களை, கல்லுாரி நிர்வாகத்தினரிடம் எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றனர்.