கடலுார் : மீனவரிடம் சிப்பி வாங்கிக் கொண்டு, ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்தை தராமல் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார், தாழங்குடாவைச் சேர்ந்தவர் அறிவு, 52; மீனவரான இவரிடம், பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்த நரேஷ், 40, என்பவர், கடந்த ஜூலை 1ம் தேதி, 1 கிலோ சிப்பி 110 ரூபாய் வீதம் விலை பேசி மொத்தம் 1,223 கிலோ வாங்கினார். இதற்கான 1 லட்சத்து 34 ஆயிரத்து 530 ரூபாயில், அறிவின் உறவினர் தனுஷ் என்பவருக்கு 'கூகுள் பே' மூலமாக நரேஷ் முதற் கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் அனுப்பினார். மீதமுள்ள 1 லட்சத்து 24 ஆயிரத்து 530 ரூபாயை அறிவு பலமுறை கேட்டும் தராமல் காலம் கடத்தினார். இதுகுறித்து அறிவு நேற்று அளித்த புகாரின் பேரில், கடலுார், தேவனாம்பட்டிணம் போலீசார் வழக்குப் பதிந்து நரேைஷ தேடி வருகின்றனர்.