கடலுாரில் எல்.ஐ.சி., முகவர்கள் ஓய்வு தினம் அனுசரிப்பு போராட்டம்
Added : அக் 01, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



கடலுார் : எல்.ஐ.சி., முகவர்கள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலுார் அலுவலகம் எதிரில் அமர்ந்து ஓய்வு தினம் அனுசரிக்கும் போராட்டம் நடந்தது.கடலுார் கிளை இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர்கள் சங்கம் சார்பில் நடந்த போராட்டத்திற்கு சங்க நிர்வாகி சிவராஜ் தலைமை தாங்கினார். மணிமாறன் வரவேற்றார்.சங்க நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி செல்வராஜ், நெடுஞ்செழியன், ரமேஷ், ராஜசேகர், பிரகாசம், ஆறுமுகம், ஆதித்தன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

போராட்டத்தில், முகவர்களுக்கு பாலிசி மீதான போனசை உயர்த்த வேண்டும், 5 ஆண்டுகளுக்கு மேலான காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க வேண்டும், ஜி.எஸ்.டி., நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.இதே போன்று, குறிஞ்சிப்பாடி எல்.ஐ.சி., துணை அலுவலகம் எதிரிலும் போராட்டம் நடந்தது. செயற்குழு உறுப்பினர் தணிகாசலம் தலைமை தாங்கினார். சங்க தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



மந்தாரக்குப்பம்



நெய்வேலி எல்.ஐ.சி., கிளை அலுவலகம் எதிரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் வீரமணி, சிறப்பு தலைவர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு தலைவர் சந்தானம் வரவேற்றார். போராட்டத்தில், பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும், பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும், முகவர்களுக்கு பணிக்கொடையை உயர்த்த வேண்டும், முகவர் கமிஷனை உயர்த்தி தர வேண்டும், மருத்துவக் குழு காப்பீடு அனைத்து முகவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் முகவாண்மை குழு காப்பீடு உயர்த்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் அன்புராசன், அரவிந்தன், தணிகாசலம், ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சங்க பொருளாளர் சின்னதுரை நன்றி கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X