என்.எல்.சி., சுரங்க விரிவாக்க பணிகள்; கருத்துக்கேட்பு கூட்டம்
Added : அக் 01, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



நெய்வேலி : என்.எல்.சி., நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளுக்கு நில ஆர்ஜிதம் செய்வது தொடர்பாக, கலெக்டர் தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 2ல் உள்ள நெய்வேலி இல்லத்தில் நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்துக்கு, கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.

என்.எல்.சி., சேர்மன் ராகேஷ்குமார், நிலக்கரித்துறை இயக்குநர் சுரேஷ் சந்திர சுமன் முன்னிலை வகித்தனர்.தமிழக அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன், எம்.எல்.ஏ.,க்கள் சபா ராஜேந்திரன், வேல்முருகன், அருண்மொழித்தேவன், பாண்டியன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கே்று என்.எல்.சி., விரிவாக்கத்தின் அவசியம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினர்.நில ஆர்ஜிதத்தால் பாதிக்கப்பட உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் விவசாயிகளின் பிரதிநிதியாக 6 பேர் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர்.

கூட்டத்தில் பங்கேற்காத மாவட்ட பா.ம.க., செயலாளர்கள் ரவிச்சந்திரன், முத்துக்கிருஷ்ணன், செல்வமகேஷ், கார்த்திகேயன் ஆகியோர் கலெக்டரை சந்தித்து பேசுகையில், 'வீடு, நிலங்களை வழங்குபவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் உரிய இழப்பீடு வழங்காமல் நில ஆர்ஜிதம் செய்ய வந்தால், பா.ம.க., சார்பில் தொடர் பேராட்டங்களை நடத்துவோம்' என்றனர். கூட்டம் முடிந்த பின், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன், கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

வீடு, நிலங்களை வழங்குபவர்களுக்கு, என்.எல்.சி., தரப்பில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 லட்சம் வழங்குவது எனவும், ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கப்படும் என்றும் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.வேலை கிடைக்காத விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்குவது அல்லது ஒரே செட்டில்மென்ட் தொகையாக ரூ.17 லட்சம் வழங்குவதற்கு என்.எல்.சி., நிர்வாகம் முன்வந்துள்ளது.மேலும், அடுத்த மாதம் 194 நபர்களுக்கு நிரந்தர வேலை வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இதில் வீடு, நிலங்களை வழங்குபவர்களுக்கு இன்டர்வியூவில் கூடுதலாக 20 மதிப்பெண்கள் வழங்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X