அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் மக்கள் குறைகேட்பு சிறப்பு முகாம் நடந்தது.அவலுார்பேட்டை கிராமத்தில் ஊராட்சி சார்பில் 2வது வார்டில் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ஷாகின் அர்ஷத் முன்னிலை வகித்தார்.ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், கிராம ஊராட்சி பி.டி.ஓ., சிலம்புச்செல்வன் ஆகியோர் மக்கள் பிரச்னைகள் குறித்து மனுக்களைப் பெற்று, குறைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.ஊராட்சி துணைத் தலைவர் சரோஜா ஐயப்பன், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.