விழுப்புரம் : முன்விரோதம் காரணமாக வீடு மற்றும் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், ரோஷணையைச் சேர்ந்தவர் ராமு மகன் பிரவீன்குமார், 29; அதே பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் மகன் ராஜ்குமார், 32; நண்பர்கள். இவர்கள் இருவரும், முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த மன்னர் மகன் ராஜ்குமார் என்பவரது வீடு மற்றும் அவரது கடையிலும் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி பெட்ரோல் பாட்டில் குண்டு வீசினர்.ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து பிரவீன்குமார், செல்வம் மகன் ராஜ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களின் தொடர் நடவடிக் கையை தடுக்கும் பொருட்டு, குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு, எஸ்.பி., ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார்.இதையடுத்து, கலெக்டர் மோகன் உத்தரவின்பேரில், பிரவீன்குமார், ராஜ்குமார் ஆகிய இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.