பெண்கள் மீதான வன்கொடுமை அதிகரித்துள்ளது மாதர் சங்க பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே பேச்சு
Added : அக் 01, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



கடலுார் : 'பெண்கள் மீதான வன்கொடுமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்துள்ளது' என, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் மரியம் தாவ்லே பேசினார்.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநில 16 வது மாநாடு கடலுாரில் நேற்று முன்தினம் துவங்கியது.இரண்டாவது நாளான நேற்று பொது மாநாடு நடந்தது. சென்னை, தேனி, கன்னியாகுமரி, புதுச்சேரி, மதுரை என, மாநிலம் முழுவதும் இருந்து தலைவர்கள் நினைவாக கொண்டு வரப்பட்ட நினைவு ஜோதிகள் பெறப்பட்டது.

மாநாட்டு அரங்கில் மாநில துணைத் தலைவர் அமிர்தம் கொடியேற்றினார். மாநில தலைவர் வாலண்டினா தலைமை தாங்கினார்.வரவேற்புக் குழு தலைவர் ரேணுகாதேவி வரவேற்க, தொடர்ந்து, தியாகிகள் படங்களுக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில செயலாளர் பிரமிளா, அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார்.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் மரியம் தாவ்லே பேசும்போது, 'தமிழகத்தில் மைக்ரோ பைனான்ஸ் நடவடிக்கைகளால் பெண்கள் பாதிக்கப்படுவதால், அதன் நடவடிக்கையை கட்டுப்படுத்த வேண்டும். பெண்கள் தங்களது குடும்ப செலவுகளுக்கு தான் கடன் பெறுகின்றனர்.பெண்கள் மீதான வன்கொடுமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகமாக உள்ளது. அதனை நியாயப்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. எனவே, இதற்கு எதிராக நாம் இயக்கங்கள் நடத்த வேண்டி உள்ளது. மத அமைப்புகள் தங்களது மத கோட்பாடுகளை காட்டி பெண்களை அடிமையாகவே வைத்திருக்க விரும்புகின்றன.

அதில் இருந்து பெண்கள் விடுபட வேண்டும்' என்றார்.மாநாட்டில் கடலுார் மேயர் சுந்தரி ராஜா, இந்திய பெண்கள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் மஞ்சுளா, மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர்கள் வாசுகி, சுதா சுந்தர்ராமன், மாநில தலைவர் ஜான்சிராணி, முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி உள்ளிட்டோர் பேசினர்.மாநாட்டில் சாதனை பெண்கள் கவுரவிக்கப்பட்டனர். மாநில பொதுச் செயலாளர் சுகந்தி, அரசியல் தீர்மானம் கொண்டு வந்தார்.மாவட்டத் தலைவர் மல்லிகா நன்றி கூறினார்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X