வணிகவரித்துறையில் பிடிபடும் வாகனங்கள்: முறையான 'பில்' இல்லாதோரால் வருவாய் இழப்பு
Updated : அக் 01, 2022 | Added : அக் 01, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

மதுரை-மதுரை பகுதியில் அடிக்கடி 'பில்' இன்றி செல்லும் வாகனங்களால் வணிகவரித்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.



மதுரை வணிகவரித்துறை அதிகாரிகள் சமீபகாலமாக தினமும் வரிஏய்ப்பு வாகன வேட்டையில் ஈடுபடுகின்றனர். நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை சோதனை செய்து தினமும் 2 லாரிகளையாவது சிறைபிடித்து அபராதம் விதிக்கின்றனர்.

நேற்று முன்தினம் பாண்டிகோயில் அருகே புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் இருந்து மதுரைக்கு கடலை பருப்பு ஏற்றி வந்த லாரியை சோதனை செய்தனர். சிறு, சிறு நிறுவனங்களில் கொள்முதல் செய்து மதுரைக்கு பில் இல்லாமல் வந்ததால் அதற்கு ரூ.61 ஆயிரம் வரை அபராதம் விதித்துள்ளதாக ஓட்டுனர் புலம்பி தவித்தார். இதேபோல இரும்பு தளவாடங்களை ஏற்றி வந்த லாரி ஒன்றும் அதிகாரிகளிடம் சிக்கியது.இப்படி மதுரை அதிகாரிகளிடம் வாகனங்கள் சிக்குவது அடிக்கடி நிகழ்கிறது. மதுரையின் பல பகுதிகளில் இருந்து அடிக்கடி பாத்திரங்கள், ஜவுளிகள் உட்பட பல்வேறு பொருட்கள் லாரிகளில் செல்கின்றன. அலுமினிய, சில்வர் பாத்திரங்களை அதிகாரிகள் கைப்பற்றும்போது, 'மூலப்பொருட்கள்' என 'பில்'லைக்காட்டி சிலர் தப்புகின்றனர். அவற்றை சோதனை செய்யும்போது, 'பில்'லை கொண்டு வருவதாக கூறி சமாளிக்கின்றனர்.

அதேபோல பல இரும்பு, பெயின்ட், மரம் விற்பனை செய்வோர் ஜி.எஸ்.டி., வசூலிக்கின்றனர். ஆனால் அப்பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்லும்போது, 'எஸ்டிமேட்' பில்லுடன் செல்கின்றனர். இதனால் வசூலிக்கும் ஜி.எஸ்.டி., வரியை முறையாக செலுத்துகின்றனரா என தெரியவில்லை.இதுபோல வரிஏய்ப்பு தகவல்கள், வணிக முறைகேடு நிறுவனங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டால், தங்களுக்கு வெளியிட அதிகாரமில்லை எனக்கூறி தவிர்க்கின்றனர். வணிகவரித்துறையினர் இதுபோன்ற வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்தால் அரசுக்கான வரிவருவாய் இழப்பை தவிர்க்கலாம்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X