போலி ஆவணம் மூலம் பாஸ்போர்ட்: 37 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
Added : அக் 01, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

மதுரையில் போலி ஆவணங்கள் மூலம் இலங்கை அகதிகளுக்கு பாஸ்போர்ட் வழங்கியது தொடர்பான வழக்கில் மத்திய அரசு ஊழியர்கள், போலீஸ் அதிகாரிகள் உட்பட 37 பேர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.

மதுரை அவனியாபுரம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் போலி முகவரி, அடையாளச் சான்று மூலம் இலங்கை அகதிகள் சிலருக்கு 53 பாஸ்போர்ட்கள் 2019ல் வழங்கப்பட்டது. கியூ பிராஞ்ச் சி.ஐ.டி.,போலீசார் 2019 ல் வழக்குப் பதிந்தனர். இவ்விவகாரத்தில் பாஸ்போர்ட், தபால்துறை, காவல்துறையைச் சேர்ந்த சில அலுவலர்களுக்கு தொடர்பு உள்ளது. கியூ பிராஞ்ச் சி.ஐ.டி.,போலீசார் விசாரணையில் முன்னேற்றம் இல்லை.

சி.பி.ஐ.,விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் முருக கணேசன் 2021 ல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.2021 பிப்ரவரியில் நீதிபதிகள் அமர்வு: விசாரணையை வேறு அமைப்பிற்கு மாற்றுவதற்கான எந்த காரணத்தையும் நாங்கள் காணவில்லை. மதுரை கியூ பிராஞ்ச் சி.ஐ.டி.,போலீசார் 3 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது. முருககணேசன்,' உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் கியூ பிராஞ்ச் சி.ஐ.டி.,-ஐ.ஜி., ஈஸ்வரமூர்த்தி, மதுரை கியூபிராஞ்ச் சி.ஐ.டி.,இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.

செப்.,23ல் நீதிபதிகள் அமர்வு விசாரணையின்போது தமிழக அரசுத் தரப்பு: விசாரணை முடிந்து குற்றப்பத்திரிக்கையை 40 பேருக்கு எதிராக மதுரை (ஜெ.எம்.,4) நீதிமன்றத்தில் கியூ பிராஞ்ச் போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் மத்திய அரசின் பாஸ்போர்ட், தபால்துறையை சேர்ந்த அலுவலர்கள், மாநில அரசுத்துறை அலுவலர்கள், தனிநபர்கள் அடங்குவர். மத்திய அரசுத்துறையின் 16 அலுவலர்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்ட பிரிவின் கீழ் (ஐ.பி.சி.,) குற்றச்சாட்டு பதிவு செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. ஒருவருக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது.

மற்றவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து மத்திய அரசிடம் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தற்போது மத்திய அரசு அலுவலர்களுக்கு எதிராக பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் மட்டும் மதுரை கலெக்டரின் அனுமதியுடன் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தது. மதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர் (ஜெ.எம்.,4) நீதிமன்ற நீதிபதி பாக்கியராஜ் நேற்று விசாரித்தார். வழக்கில் எதிரிகளாக சேர்க்கப்பட்ட 40 பேரில் திருச்சி முகமது காசிம், மதுரை கோமதி இறந்துவிட்டனர்.

மற்ற 38 பேரில் வைத்தியநாதன், கல்யாணராமன், அண்ணாதுரை, சண்முகசுந்தரம், சிவசாமி உட்பட 37 பேர் ஆஜராகினர். இவர்களில் சம்பவத்தின்போது மதுரை நகர் நுண்ணறிவு உளவுப் பிரிவு (ஐ.எஸ்.,) உதவி கமிஷனராக இருந்த சிவகுமார், அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் இளவரசு, ஏட்டு கந்தசாமி உட்பட பாஸ்போர்ட் மற்றும் தபால்துறை அலுவலர்கள், ஏஜன்ட்கள், இலங்கை அகதிகள் அடங்குவர். ஒரு அலுவலர் டில்லியில் தேர்வு எழுதச் சென்றதால் ஆஜராகவில்லை. மற்ற 37 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன. அவை 750 முதல் 1100 பக்கங்கள் கொண்டவை.விசாரணையை அக்.,28க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X