ஆவின் சிறப்பு இனிப்பு துவங்கியது முன்பதிவு
Added : அக் 01, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சென்னை: 'ஆயுத பூஜை மற்றும் தீபாவளிக்கு ஆவின் சிறப்பு இனிப்புகள் வாங்க முன்பதிவு செய்யலாம்' என ஆவின் மேலாண்மை இயக்குனர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஆவின் நிறுவனம் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி நெய் பாதுஷா நட்ஸ் அல்வா ஸ்டப்டு மோதிபாக் காஜு பிஸ்தா ரோல் காஜு கத்லி வகைப்படுத்தப்பட்ட இனிப்பு வகைகள் நெய் அல்வா கருப்பட்டி அல்வா மிக்ஸர் போன்றவற்றை அறிமுகம் செய்துள்ளது. இனிப்புகளில் எவ்வித வேதி பொருட்களும் சேர்க்காமல் நவீன தொழில்நுட்ப முறையில் பேக்கிங் செய்யப்படுகிறது.

இதனால் நீண்ட நாட்கள் வரை பயன்படுத்தும் வகையில் இனிப்புகளின் காப்புக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அரசு துறை அலுவலகங்கள் தனியார் நிறுவனங்கள் அரசு ஊழியர்கள் கூட்டுறவு நிறுவனங்கள் போக்குவரத்து துறை மற்றும் பிற நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான காரம் மற்றும் இனிப்பு வகைகளை ஆவின் நிறுவனத்தில் முன் பதிவு செய்யலாம்.

மேலும் https://aavin - special - order - booking.web.app என்ற இணையதளம்; aavinspecialorders@gmail.com இ - மெயில் முகவரி; 73580 18390 என்ற வாட்ஸ் ஆப் எண்; சென்னை தலைமை அலுவலகத்தை 73580 18395 என்ற எண்; இதர மாவட்டங்களில் 73580 18396 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.கூடுதல் தகவல்களுக்கு 1800 425 3300 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
01-அக்-202212:53:15 IST Report Abuse
ரங்கஸ்வாமி ஆவின் மதுரை பீபிகுளம் உழவர் சந்தையில் உள்ள விற்பனையகத்தில் அனைத்துப் பொருட்களையும் சில்லரை எண்ணி கொடுத்து வாங்கும் அவலத்தைக்காணலாம். இந்தியா 5G தொழில்நுட்பத்துக்கு முன்னேறியுள்ள நிலையிலும், UPIபேமன்டோ, கிரெடிட் கார்டு பேமன்டோ இல்லாத மதுரையின் மத்திய அரசின் வருமானவரித்துறை, சரக்கு மற்றும் சேவைத்துறையின் பிரதான அலுவலகங்கள் உள்ள உழவர் சந்தையில் இந்த அவல நிலை.எவ்வளவுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X