சென்னை: 'ஆயுத பூஜை மற்றும் தீபாவளிக்கு ஆவின் சிறப்பு இனிப்புகள் வாங்க முன்பதிவு செய்யலாம்' என ஆவின் மேலாண்மை இயக்குனர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஆவின் நிறுவனம் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி நெய் பாதுஷா நட்ஸ் அல்வா ஸ்டப்டு மோதிபாக் காஜு பிஸ்தா ரோல் காஜு கத்லி வகைப்படுத்தப்பட்ட இனிப்பு வகைகள் நெய் அல்வா கருப்பட்டி அல்வா மிக்ஸர் போன்றவற்றை அறிமுகம் செய்துள்ளது. இனிப்புகளில் எவ்வித வேதி பொருட்களும் சேர்க்காமல் நவீன தொழில்நுட்ப முறையில் பேக்கிங் செய்யப்படுகிறது.
இதனால் நீண்ட நாட்கள் வரை பயன்படுத்தும் வகையில் இனிப்புகளின் காப்புக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அரசு துறை அலுவலகங்கள் தனியார் நிறுவனங்கள் அரசு ஊழியர்கள் கூட்டுறவு நிறுவனங்கள் போக்குவரத்து துறை மற்றும் பிற நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான காரம் மற்றும் இனிப்பு வகைகளை ஆவின் நிறுவனத்தில் முன் பதிவு செய்யலாம்.
மேலும் https://aavin - special - order - booking.web.app என்ற இணையதளம்; aavinspecialorders@gmail.com இ - மெயில் முகவரி; 73580 18390 என்ற வாட்ஸ் ஆப் எண்; சென்னை தலைமை அலுவலகத்தை 73580 18395 என்ற எண்; இதர மாவட்டங்களில் 73580 18396 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.கூடுதல் தகவல்களுக்கு 1800 425 3300 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.