அண்ணாதுரை சிலை அவமதிப்பு மூன்று பேர் கைது: கடையடைப்பு
Added : அக் 01, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

கண்டமங்கலம்: கண்டமங்கலத்தில் அண்ணாதுரை சிலையை அவமதித்த வழக்கில் முக்கிய குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில், விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலை உள்ளது.கடந்த 25ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல், சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து, சிலையின் கீழே தி.மு.க., - எம்.பி., ராஜாவின் படத்திற்கு கரும்புள்ளி, செம்புள்ளி வைத்து, செருப்பு மாலை அணிவித்திருந்தனர்.

மேலும், சிலைக்கு அருகே உள்ள தி.மு.க., கொடிக் கம்பத்தில் இருந்த கொடியைக் கழற்றி, அதை அண்ணாதுரை சிலையின் முகத்தை மறைத்து கட்டினர்.கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து, கண்டமங்கலம் வேணு மகன் வீரமணி, 28; சடையப்பன் மகன் அப்பு 22; மற்றும் நவமால்மருதுார் அருணாசலம் மகன் ஆகாஷ், 21 ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில், அண்ணா துரை சிலை அவமதிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி, வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கண்டமங்கலம் தேசிய நெடுஞ்சாலை, மருதுார் சாலை, பள்ளி வாசல் வீதி, வாய்க்கால் மேட்டுத்தெரு உட்பட கண்டமங்கலம் ஊராட்சி முழுதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X