திருவண்ணாமலை:திருவண்ணாமலையில், மலை உச்சிக்கு சென்று, அண்ணாமலையார் பாதத்திற்கு பூஜை செய்த ஆட்டோ டிரைவருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள, 2,668 அடி உயர மலை உச்சியில் கார்த்திகை தீப திருவிழாவின் போது, மகா தீபம் ஏற்றப்படும்.மலையில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்தால், அரிய வகை மூலிகை மரங்கள் எரிவதை தடுக்கும் வகையில் மலை மீது பக்தர்கள் ஏற வனத்துறை தடை விதித்துள்ளது.
இந்நிலையில், மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு, சிறப்பு பூஜை செய்த, 'வீடியோ' சமூக வலைதளத்தில் பரவியது.இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் விசாரித்ததில், பூஜை செய்தது திருவண்ணாமலை, கோபுரம் தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன், 30, என்பது தெரிந்தது. இதையடுத்து, அவருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.